AI Apps Threatens Women. 
அறிவியல் / தொழில்நுட்பம்

பெண்களை அச்சுறுத்தும் AI Apps. 

கிரி கணபதி

கடந்த சில நாட்களாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் மோசமான புகைப்படங்கள் இணையத்திலவெளியாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு உண்மை போலவே இருப்பதால், இதை மக்களும் நம்பி விடுகின்றனர். இதனால் நடிகைகள் முதல் சாதாரண பெண்கள் வரை பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். பெண்களை நிர்வாணமாகக் காட்டுவதற்கு பிரத்தியேகமாக செயலிகள் இருப்பதாகவும் சைபர் கிரைம் நிபுணர்கள் சொல்கிறார்கள். 

இப்போது உருவாகி இருக்கும் புதிய தொழில்நுட்பம் மூலமாக, ஒரு செயலியில் புகைப்படத்தை அப்லோடு செய்தால் போதும், அவர்கள் அணிந்திருக்கும் ஆடையை நீக்கி நிர்வாணமாக மாற்றிவிடுகிறது அந்த செயலி. இத்தகைய ஆப்களை தற்போது கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இணையத்தில் அதிகப்படியான விளம்பரங்களும் வெப்சைடுகளும் பிரபலமடைந்து வருகிறது. 

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் ஆடைகளை மறையச் செய்யும் இத்தகைய வெப்சைட்களை, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும் இந்த ஆப்கள் சார்ந்த விளம்பரங்கள் பல சமூக வலைதளங்களில் வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ட்விட்டர் எக்ஸ் மற்றும் Reddit போன்ற சமூக ஊடக தளங்களில் பெண்களின் ஆடையை மறையச் செய்யும் ஆப்ஸ் சார்ந்த விளம்பரங்கள், 2400 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் பெரும்பாலும் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டு நிர்வாணமாக மாற்றப்படுகிறது என்பது நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.

இத்தகைய மோசமான தொழில்நுட்ப வளர்ச்சியால், ஒரு மோசமான காணொளி உருவாக்கி அதில் பல பெண்களின் முகத்தைப் பொருத்தி அதிக எண்ணிக்கையில் ஆபாச படங்கள் உருவாக்கப்பட்டு, இணையத்தில் பகிரப்படுகிறது. இணையத்தில் நாம் பகிரும் புகைப்படங்கள், வீடியோக்களை நம் அனுமதி இல்லாமல் எடுத்து, அவற்றை போலி வீடியோவாக மாற்றி விற்பனை செய்கின்றனர்.  

இப்படிதான் சமீபத்தில் பல நடிகைகளின் மோசமான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோக்கள் அனைத்தும் பார்ப்பதற்கு உண்மை போல இருப்பதால், இது எதிர்காலத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. பெண்களை மோசமாகக் காட்டும் செயலிகள் இணையத்தில் எளிதாக கிடைத்துவிடுகிறது என்பதால், இதனால் பல மோசமான விளைவுகளை உலகம் சந்திக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எனவே இனி இணையத்தில் நாம் பார்க்கும் எதையும் நம்ப முடியாது. மேலும், இதுபோன்ற தொழில்நுட்பங்களிடமிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியம். 

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT