Apple iMac - M3
Apple iMac - M3 
அறிவியல் / தொழில்நுட்பம்

அதிவேக செயல் திறன் கொண்ட iMac M3 மாடலை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள்!

க.இப்ராகிம்

அதிவேக செயல் திறன் கொண்ட iMac M3 மாடல் அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

தொலைத் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமாக விளங்கி வருவது ஆப்பிள். இந்நிறுவனம் தனது தொழில் போட்டியை சமாளிக்க தொடர்ச்சியான பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருவதுடன், தனது நிறுவனத்தினுடைய சாதனங்களில் கூடுதல் அம்சங்களையும் இணைக்கவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஐபோன் போன்கள் தொடங்கி லேப்டாப், இதர உபகரணங்கள் என்று அனைத்திலும் கூடுதல் அம்சங்கள் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டு வருகிறது. இதனால் புதிய புதிய வெர்சன்களில் ஆப்பிள் நிறுவனத்தினுடைய சாதனங்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் iMac லேப்டாப் அதிவிரைவு செயல்பாடு கொண்ட M3 ரகத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் மற்ற கணினிகள், லேப்டாப்களை பயன்படுத்தும் போது கிடைப்பதை விட 60 சதவீதம் செயல்பாட்டை கூடுதலாக பெற முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் முலம் அடுக்கடுக்காக பல போல்டர்களை பயன்படுத்தி தடையற்ற சேவையை அதிவேகமாக பெற முடியும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள iMac M3 மூன்று மாடல்களில் தற்போது வெளிவந்திருக்கின்றது. இவ்வாறு M3, M3 Pro, M3 Max என்ற மூன்று மாடல்கள் தற்போது வெளிவந்து இருக்கின்றன.

M3 மாடலில் இரண்டு 2TB ஸ்டோரேஜ், டச் ஸ்கிரீன், ஒய்பை, ப்ளூடூத் 5.3 என்ற அனைத்து அதிநவீன வெர்சன்களும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் M3 ரக iMac விலை 14 இன்ச் ஸ்கிரீன் 1.31 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 16 இன்ச் ஸ்கிரீன் 2.88 லட்சம் ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

குழந்தைகளின் தனித்திறமையை வளர்த்தெடுப்பது எப்படி?

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

SCROLL FOR NEXT