UPI பணப்பரிமாற்றம் செய்யும் விதிகளில் RBI மாற்றம் செய்துள்ளது. அதன்படி UPI Lite ஆஃப்லைன் பணப் பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் 2000 என்ற வரம்பையும், குறைந்தபட்சம் 200 என்ற வரம்பையும் நிர்ணயித்துள்ளது RBI.
மேலும் இந்த ஒரு முறை பணப் பரிவர்த்தனை வரம்பு, விரைவில் 500 ஆக அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதை ஏன் ஆர்பியை கொண்டு வந்துள்ளதென்றால் வெரிஃபிகேஷன் முறையை நீக்குவதில் உள்ள அபாயங்களைக் குறைக்க ஒட்டுமொத்த தினசரி பரிவர்த்தனை வரம்பு 2000 ஆக பராமரிக்கப்படுகிறது.
பயனர்களின் டிஜிட்டல் பேமென்ட் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக புதிய தொழில்நுட்பங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்குடன் சிறிய டிஜிட்டல் பேமென்ட் பரிவர்த்தனையை ஆஃப்லைன் முறையில் 200-ல் இருந்து 500 ஆகவும், ஒரு பேமென்ட் ஒன்றுக்கு 2000 என்ற ஒட்டுமொத்த வரம்புக்குள் உயர்த்தப்படும் என முன்மொழிபப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
UPI லைட் என்பது யுபிஐ கட்டண முறையில் எளிமையாக்கப்பட்ட பதிப்பாகும். இது 2022-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது பின்நம்பர் பயன்படுத்தாமல் சிறிய வகை பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பணப்பரிவதனை செய்யும்போது ஒரு பயனர் அவர்களின் பின் நம்பரை உள்ளிட வேண்டிய தேவையை அரசாங்கம் நீக்கியுள்ளது. இந்த முறையால் தினசரி பணப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் பிரச்சனைகள் முற்றிலுமாக நீக்கப்படும். மேலும் பயனர்களும் அசௌகரியம் இல்லாமல் சிறிய பணப் பரிவர்த்தனையை செய்ய முடியும்.
மேலும் UPI பயன்பாட்டின் வசதி மற்றும் அணுகல்களை மேம்படுத்துவதற்காக பல புதிய அம்சங்களை RBI அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த அம்சங்களில் அருகில் உள்ள சாதனங்களுக்கு NFC தொழில்நுட்பத்தை பயன்படுத்தி UPI வழியாக ஆஃப்லைன் கட்டணங்கள் செலுத்துவதும் அடங்கும். இந்த அம்சம் பயனர்கள் இணைய இணைப்பு இல்லாத சூழலிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய உதவும்.