China's Rocket 
அறிவியல் / தொழில்நுட்பம்

நிலவின் இருண்டப் பக்கத்திலிருந்து மண் எடுத்து வரத் திட்டமிட்டுள்ள சீனா!

பாரதி

நிலவின் இருண்டப் பகுதியான மற்றொரு பக்கத்தில் சீனாவின் விண்கலம் ஒன்று தரையிறங்கியுள்ளது. அந்த விண்கலம் அங்கிருந்து மண் துகளை பூமிக்குக் கொண்டு வரவுள்ளது என்று சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு நிலவு மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனெனில் பூமியின் சுழற்சியை கட்டுப்படுத்துவதிலும், பூமியில் இருக்கும் கடல்களின் அலைகளை சீராக வைத்திருப்பதிலும் நிலா பெரிய பங்குவகிக்கிறது. அப்போதெல்லாம், நமது முன்னோர்கள், நிலவையே காலண்டராகப் பயன்படுத்தினார்கள். அதேபோல் நிலவை ஆய்வு செய்வதில் பல ஆண்டு காலமாக பல உலக நாடுகள் ஆர்வமாக இருந்து வந்தன. ஆனால், சில ஆண்டுகளாக நிலவை ஆராய்ச்சி செய்வது உலக நாடுகள் மத்தியில் குறைந்துக் கொண்டே வந்தது.

இந்த சூழ்நிலையில்தான் இந்தியா சந்திரயான் திட்டத்தை உலக நாடுகள் மத்தியில் வெற்றிகரமாக நிறைவேற்றியது. ஆம்! தென்துருவத்தில் இதுவரை யாருமே விண்கலத்தை தரையிறக்கவில்லை. ஆனால், இந்தியா முதன்முதலாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கி உலக சாதனைப் படைத்தது. அதன்பின்னர் ரஷ்யாவும்  ஜப்பானும் தொடர்ந்து விண்கலன்களை அனுப்பினார்கள். ஆனால், அவை இரண்டுமே தோல்வியில் முடிந்தன.

ஆனால், இந்த முயற்சியை கைவிடாமல், ரஷ்யா ஒரு பக்கமும் சீனா மறுபக்கமும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. அந்தவகையில் சீனா மற்றொரு திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. அதாவது, நிலவின் மற்றொரு பக்கத்திலிருந்து மண்ணை எடுத்து பூமிக்குக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது.

பொதுவாக நிலா பூமியைப் போல தன்னைத் தானே சுற்றிக்கொள்வதில்லை. ஆகையால் அதன் ஒரு பக்கம் மட்டுமே பூமியின் பக்கம் தெரிகிறது. இதனாலேயே உலக நாடுகள் அனைத்தும் அந்தப் பக்கத்தில் மட்டுமே இதுவரை ஆராய்ச்சி செய்து வந்தனர். அதேபோல் நிலவின் அந்தப் பக்கம் மட்டும்தான் விண்கலன்களையும் இறக்கி வந்தனர்.

இப்படி இருக்கையில் மற்றொரு பக்கத்தில் ஆய்வை சீனா தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு 'லாங் மார்ச்-5' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான ராக்கெட் தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து கடந்த மாதம் ஏவப்பட்டது. இதில் Chang'e-6 எனும் ஆய்வுக் கருவி இணைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது அந்த கருவி நிலவில் தரையிறங்கிவுள்ளது. அந்த கருவி மண்ணை எடுத்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியது என்றால், நிலவின் மறுபக்கத்திலிருந்து மண் எடுத்து வரும் முதல் நாடாக சீனா விளங்கும். இந்த வரலாற்று சாதனையை சீனா படைக்குமா என்று உலக நாடுகள் உற்று நோக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த திட்டத்தில் பிரான்ஸ், இத்தாலி, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கெடுத்துள்ளனர். எனவே இந்த நாடுகளை சேர்ந்த சில கருவிகளும் இந்த நிலவுக்கு செல்லும் ராக்கெட்டில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வு மனித குல வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT