Electricity 
அறிவியல் / தொழில்நுட்பம்

உலகில் மின்சாரம் குறைவாக பயன்படுத்தும் நாடுகள்!

A.N.ராகுல்

இன்றைய காலகட்டத்தில் எதை தொட்டாலும் அதற்கு மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ளது. AC, DC என்று பல வகைகளில் மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இருந்தும் சில நாடுகள் இதிலிருந்து தனித்து குறைவான மின்நுகர்வு கொண்ட நாடுகளாக பெயர் பெற்றுள்ளன. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

குறைவான மின் நுகர்வு கொண்ட நாடுகள்:

மின்சாரத்தை உபயோகிப்பதில் பல நாடுகள் அவற்றின் குறைந்தபட்ச பயன்பாட்டிற்காக, உலகளவில் தனித்து நிற்கின்றன. இதற்கு பெரும்பாலும் அங்குள்ள சிறிய மக்கள்தொகை, குறைவான தொழில்துறை செயல்பாடு அல்லது பயனுள்ள ஆற்றல் சேமிப்பு நடவடிக்கை போன்ற விஷயங்களே காரணமாகும். பூட்டான் (Bhutan), நேபாளம் (Nepal) மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான சாட் (Chad) மற்றும் நைஜர் (Niger) ஆகியவை குறைந்த மின்சார நுகர்வு கொண்ட சில முன்னணி நாடுகளாக விளங்குகின்றன.

எப்படி இந்த குறைந்த மின் நுகர்வு சாத்தியமாகிறது:

இந்த நாடுகள் பல காரணங்களால் இந்த குறைந்த மின் நுகர்வை அடைந்துள்ளன. முதலாவதாக, அவைகளில் பல நாடுகள் சிறிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. இது இயற்கையாகவே ஒட்டுமொத்த நுகர்வை குறைக்க வழிவகுக்கிறது. இரண்டாவதாக, இந்த நாடுகளில் தொழில்துறை சார்ந்த தயாரிப்பு நிறுவங்களின் எண்ணிக்கை பெரும்பாலும் குறைவாக உள்ளது. அதாவது ஏற்கனவே அங்கு இயங்கும் தொழிற்சாலைகளில் கையாளப்படும் செயல்பாடு கேற்ப குறைவான மின்சார தேவையே பயன்படுத்தப்படும். இந்த நிலையை தக்க வைக்க கூடுதலாக, இந்த நாடுகளில் பல ஆக்கபூர்வமான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை செயல்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, பூட்டான் அதன் பெரும்பாலான மின்சாரத்தை நீரோட்டம் மூலம் உற்பத்தி செய்கிறது. இது ஒரு புதுப்பிக்கத்தக்க செயல் மற்றும் குறைவான விரயத்தை தான் உண்டாகும். அதேபோல் நேபாளமும் நீரோட்டம் மூலமாக வரும் மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றலிலும் முதலீடு செய்துள்ளது. இதனால் அவர்களுக்கு நிலக்கரி மற்றும் பூமிக்கு அடியில் இருந்து எடுக்கும் மின்சாரம் போன்றவை தேவையற்றதாக உள்ளது.

மின்சார நுகர்வு குறைக்கப்பட்டால் உலகளாவிய தாக்கம் எப்படி இருக்கும்:

இதுபோல் குறைந்த மின்சார நுகர்வு கொண்ட நாடுகளில் காணப்படும் சூழல் போல் அனைத்து நாடுகளும் தங்கள் மின் நுகர்வுயை குறைக்க முடிவு செய்தால், அது சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பின் அனைவராலும் குறைக்கப்பட்ட மின்சார நுகர்வு நச்சு வாயு (Harmful greenhouse gases) வெளியேற்றத்தை குறைக்க வழிவகுக்கும். இது நாம் உலக முழுக்க பொதுவாக எதிர்கொள்ளும் காலநிலை மாற்றத்தை குறைக்க பெரிதும் பங்களிக்கும். மற்றும் முக்கியமாக மின்சார தேவை குறையும் போது அதன் உற்பத்திக்கு தேவைப்படும் எரிபொருள் பயன்பாடு குறையும். இது இயற்கை வளங்களின் மீதான தேவையற்ற தாக்கங்களை குறைக்க வாய்ப்பளிக்கும்.

இப்படி சில நாடுகளின் இந்த குறைந்த மின்சார நுகர்வு பாராட்டத்தக்கது என்றாலும், உலக அளவில் இதை பின்பற்ற செய்வது ஒரு சிக்கலான ஒன்று. அதேநேரம் இது அரங்கேறினால் ஒரு வித மாற்றத்தக்க முயற்சியாக இருக்கும். இருப்பினும், உலகளவில் இத்தகைய நிலையை அடைவதற்கு வாழ்க்கை முறை, தொழில்துறை நடைமுறைகள் மற்றும் ஆற்றல் கொள்கைகளில் கணிசமான மாற்றங்கள் தேவைப்படுகிறது. பின் வளர்ந்த நாடுகள் குறைவான ஆற்றல் திறன் கொண்ட தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable) ஆதாரங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும். கூடுதலாக, மக்களும் நிகழ்கால மற்றும் எதிர்கால நலனை மனதில் வைத்துக்கொண்டு, தங்களின் தேவைக்கேற்ப மின்சார பயன்பாட்டை வைத்துக் கொண்டாலே மேலே குறிப்பிட்ட அனைத்து நன்மைகளும் இயல்பாகவே கிடைக்கும்.

பலாக்கொட்டை உடலுக்குத் தரும் நன்மைகளும் தீமைகளும்!

உலகின் மிக சிறிய 'புடு' மான் ஈன்ற குட்டிமான்!

‘ஆல் இன் ஒன்’ பெற்றோராகத் திகழ்வது எப்படி தெரியுமா?

திருப்பதி லட்டு வாங்க இனி திருப்பதிக்கு செல்ல வேண்டாம்! 

Soap Vs Body Wash: உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

SCROLL FOR NEXT