Cybercab 
அறிவியல் / தொழில்நுட்பம்

டிரைவர் இல்லாத ரோபோ டேக்ஸி…  எலான் மஸ்கின் புதிய கனவு! 

கிரி கணபதி

தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய புரட்சியாளர்களில் ஒருவரான எலான் மஸ்க் மீண்டும் ஒருமுறை எல்லோரையும் வியப்பில் அழுத்தியுள்ளார்.‌ இம்முறை அவர் கையில் கொண்டு வந்துள்ளது, எதிர்கால போக்குவரத்தில் புதிய வரலாறு படைக்கப்போகும் ‘Cybercab’ என்னும் ரோபோ டேக்ஸி. மின்சார வாகனங்களின் தந்தையாக அறியப்படும் Elon Musk தற்போது தனது பார்வையை தானியங்கி வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்னும் புதிய பரிணாமத்திற்கு விரிவுபடுத்தியுள்ளார். 

சைபர் கேப்: ஒரு பார்வை! 

சைபர் கேப் என்பது ஸ்டீரிங் வீல் அல்லது பெடல்கள் இல்லாத முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இயங்கும் ஒரு மின்சார வாகனம். இதில் இரண்டு பயணிகள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பட்டாம்பூச்சி இறக்கை கதவுகள் மற்றும் நவீன வடிவமைப்பு இதனை எதிர்காலத்தின் வாகனமாக மாற்றியுள்ளது. சைபர் கேப், வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை மீட்டெடுக்கும் திறன் கொண்டது. இது எலான் மஸ்கின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பிரதிபலிப்பாகும். 

டெஸ்லா, அடுத்த ஆண்டு டெக்ஸாஸ் மற்றும் கலிபோர்னியாவில் தானியங்கி வாகனங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. சைபர் கேபின் உற்பத்தி 2026 அல்லது 2027-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல்கள் தானியங்கி வாகனங்களின் எதிர்காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தெளிவாக காட்டுகின்றன. சைபர் கேப் போன்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை குறைத்து பயணத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் என நம்பப்படுகிறது. 

Optimus Robot: சைபர் கேப்பை அறிமுகப்படுத்திய அதே நிகழ்வில் எலான் மாஸ்க் தனது மற்றொரு புதுமையான கண்டுபிடிப்பான ஆப்டிமஸ் ரோபோ குறித்தும் பேசினார். இந்த ரோபோ பல்வேறு வகையான பணிகளைச் செய்யும் திறன் கொண்டது. மஸ்கின் கணிப்பின்படி இந்த ரோபோவின் விலை 20,000 டாலர்கள் முதல் 30,000 டாலர்கள் வரை இருக்கும்.‌ ஆப்டிமஸ் ரோபோ மனிதர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொழிற்சாலைகள், வீடுகள் மற்றும் பிற இடங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படலாம். 

சைபர் கேப் மற்றும் ஆப்டிமஸ் ரோபோ ஆகியவற்றின் அறிமுகம் டெஸ்லா வெறுமனே மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக இருப்பதில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. எலான் மஸ்க் தனது நிறுவனத்தை ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு எனும் புதிய பரிணாமத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். இந்த புதிய வணிக மாதிரி தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சைபர் கேப் எலான் மஸ்கின் கற்பனை வளத்திற்கு ஒரு சான்றாகும். இது எதிர்கால போக்குவரத்தின் திசையை மாற்றும் வல்லமை கொண்டது. சைபர் கேப் மற்றும் ஆப்டிமஸ் ரோபோ போன்ற கண்டுபிடிப்புகள் மனித குலத்தின் வாழ்க்கையை எளிதாக்கி உலகை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என நம்புவோம்.

Mouni Roy Beauty Secrets: மௌனி ராய் அழகின் ரகசியம்!

நம்முடைய வாழ்க்கையில் அன்பும் அரவணைப்பும் யாருக்கு தேவை?

சூப்பர் ஹீரோ படத்தில் பாலையாவுடன் ஜோடி சேரும் உலக அழகி!

இன்னுமுமா இந்த டீ, காபி எல்லாம் குடிக்கிறீங்க? கடவுள்தான் காப்பாத்தணும்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு... சிகரம் தொட்ட அருணிமாவைப் போல்!

SCROLL FOR NEXT