D2M Technology.
D2M Technology. 
அறிவியல் / தொழில்நுட்பம்

D2M Technology: இனி வீடியோ ஸ்ட்ரீம் செய்ய சிம் கார்டும் வேண்டாம், இன்டர்நெட்டும் வேண்டாம்!

கிரி கணபதி

D2M என்கிற புதிய தொழில்நுட்பம் வழியாக சிம் கார்டு மற்றும் இன்டர்நெட் இல்லாமலே வீடியோ கால் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

டிஜிட்டல் துறை சார்ந்த முன்னெடுப்புகளில் இந்தியா அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரம் டிஜிட்டல் துறையில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருந்து வரும் நிலையில், Direct 2 Mobile என்ற புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த தொழில்நுட்பம் மூலமாக பயனர்கள் இனி சிம் கார்டு மற்றும் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்து பார்க்க முடியும். இதற்கான தனியான ஒளிபரப்பை மத்திய அரசு தற்போது சோதித்து வரும் நிலையில், டெல்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் தகவல் மற்றும் ஒளிபரப்புதீ துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா இது குறித்த விளக்கத்தை அளித்தார். 

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தின் முதற்கட்ட சோதனை 19 நகரங்களில் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதன் மூலமாக 20 முதல் 30 சதவீதம் வீடியோ ஸ்ட்ரீமிங் டிராபிக்கை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றுவது மூலமாக, 5ஜி நெட்வொர்க்கின் ட்ராஃபிக் மேம்படும். இது நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியை வேகமாக்கும் என்றும் கூறினார். 

D2M தொழில்நுட்பம் என்றால் என்ன? 

D2M தொழில்நுட்பம் என்பது டிடிஎச் அல்லது கேபிள் இணைப்பு மூலமாக நேரடியாக பயனர்களின் ஃபோனில் டிவியை பார்க்க அனுமதிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். முக்கியமான நேரங்களில் குடிமக்களுக்கு தகவலை நேரடியாக ஒளிபரப்பவும், எச்சரிக்கைகள் வழங்கவும், பேரிடர் சமயங்களில் உதவவும் இந்த தொழில்நுட்பம் உதவும். 

இணைய வசதி இல்லாமல் எப்படி FM ரேடியோக்கள் இயங்குகிறதோ அதேபோல அலைவரிசைகளைப் பயன்படுத்தி இந்த தொழில்நுட்பம் இயங்குகிறது. OTT இயங்குதலங்கள் தங்களின் பயனர்களுக்கு உள்ளடக்கங்களை நேரடியாக இந்தத் தொழில்நுட்பம் வழியாக அனுப்பலாம். 

இது மொபைலை டிவியுடன் இணைத்து ஒளிபரப்பும் ஊடகமாக மாறினால், இணைய போக்குவரத்து வெகுவாகக் குறையும் என நம்பப்படுகிறது. இதற்கான ஆய்வுகளை, ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் ஐஐடி கான்பூர் இணைந்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த தொழில்நுட்பம் எப்படி சிறப்பாக செயல்படும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை சேகரித்து கருத்துகளும் வழங்கப்பட்டு வருகிறது. 

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT