Did God, nature or science create the universe? 
அறிவியல் / தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தைப் படைத்தது கடவுளா, இயற்கையா, அறிவியலா? 

கிரி கணபதி

இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்ற கேள்வி பல காலமாகவே எழுந்த வரும் ஒன்றாகும். இந்தக் கேள்விக்கு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் அறிவியல் துறைகள் பல விடைகளை வழங்கி உள்ளன. கடவுள், இயற்கை, அறிவியல் போன்ற பல்வேறு கோட்பாடுகள் பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்க முற்பட்டுள்ளன. இந்தப் பதிவில் அவற்றைப் பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.‌

கடவுளா? 

பல நாகரிகங்களில் பிரபஞ்சம் ஒரு உயர்ந்த சக்தியால் அதாவது கடவுளால் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இதன்படி, கடவுள் தனது  விருப்பத்தால் பிரபஞ்சத்தை வெளிப்படுத்தினார் எனக் கூறுகின்றனர். இந்தக் கோட்பாடு பல மதங்களின் அடிப்படையாக உள்ளது. இந்த நம்பிக்கையின் வலிமை என்னவென்றால், மனிதர்களின் ஆன்மிக தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நம்பிக்கை உதவுகிறது. ஆனால், இந்த கோட்பாட்டை அறிவியல் முறையில் நிரூபிப்பது மிகவும் கடினம். 

இயற்கையா? 

இந்தப் பிரபஞ்சம் இயற்கையாக உருவானது என்ற கோட்பாட்டின்படி, பிரபஞ்சம் தானாகவே உருவானது. பிரபஞ்சம் என்பது தானாக தன்னை ஒழுங்கமைக்கும் ஒரு அமைப்பு. இயற்கை விதிகள் தானாகவே செயல்பட்டு பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளன. இந்த கோட்பாடு கடவுள் கோட்பாட்டிற்கு மாற்றாக ஒரு விளக்கத்தை அளிக்கிறது. ஆனால், இந்த கோட்பாட்டால் பிரபஞ்சத்தின் தொடக்கம் எப்படி நடந்திருக்கும் என்ற தருணத்தை விளக்க முடியவில்லை. 

அறிவியலா? 

அறிவியல் படி, இந்தப் பிரபஞ்சம் ஒரு பெருவெடிப்பினால் (Big Bang) உருவானது எனச் சொல்லப்படுகிறது. பிரபஞ்சத்தின் விரிவாக்கம் மற்றும் கதிர் வீச்சு போன்ற பல அறிவியல் ஆதாரங்கள் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன. எனவே, அறிவியல் கோட்பாடு பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்க மிகவும் நம்பகமான ஒரு கோட்பாடாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இந்த பிரபஞ்சத்திற்கு முன்பு என்ன இருந்தது என்ற கேள்விக்கு முழுமையான விடை கிடைக்கவில்லை. 

இதில் மற்றொரு கோட்பாடாக பல பிரபஞ்சக் கோட்பாடு (Multiverse Theory) உள்ளது. இதன்படி, நாம் வாழும் பிரபஞ்சம் ஒன்று மட்டுமல்ல, எண்ணற்ற பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இந்தப் பிரபஞ்சங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான இயற்பியல் விதிகளைக் கொண்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த கோட்பாட்டுக்கு முழுமையான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த புதிய கேள்விகளை இது எழுப்புகிறது. 

இன்று வரை பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த கேள்விக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை. எனவே, பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள, நமக்கு இன்னும் ஆழமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. 

உங்களை நாய் கடித்துவிட்டால் பதற வேண்டாம்… இவற்றை சரியாக செய்தாலே போதும்! 

தலைக்கு சீயக்காய் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

மனதுக்கு உற்சாகத்தையும் பாதுகாப்பு உணர்வையும் தரும் மஞ்சள் நிற மகத்துவம்!

சிறுகதை; மூடப்பட்ட வழிகள்!

ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?

SCROLL FOR NEXT