Super Blue Moon 
அறிவியல் / தொழில்நுட்பம்

சூப்பர் ப்ளூ மூன் பற்றி தெரியுமா உங்களுக்கு?

ரா.வ.பாலகிருஷ்ணன்

பூமியை நெருங்கி வரும் நிலவு பிரகாசமாக இருந்தால் அதனை சூப்பர் ப்ளூ மூன் என்று விஞ்ஞானிகள் அழைப்பார்கள். இந்த சூப்பர் ப்ளூ மூன் எந்த நாட்களில் தோன்றும்; அப்போது நிலவின் பிரகாசம் எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

வானில் பல அதிசயங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இதனைத் தெரிந்து கொள்ளவே பல நாட்டு விஞ்ஞானிகளும் வான் ஆராய்ச்சியில் இறங்கி, ஒவ்வொரு கோளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நாம் வாழும் பூமியின் துணைக்கோளான நிலவு, பூமியைச் சுற்றி வர ஒரே ஒரு நாளை மட்டும் எடுத்துக் கொள்கிறது. இருப்பினும் நிலவு பூமிக்கு அருகில் வருவது எப்போதாவது தான் நிகழும். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால், நம்மால் அதனை எளிதாக காண முடியும்.

நீள்வட்டப் பாதையின் மிகவும் தொலைதூரப் புள்ளி அப்போஜீ என்றும், மிகவும் அருகில் இருக்கும் புள்ளி பெரிஜீ என்றும் அழைக்கப்படுகிறது. நிலவு பெரிஜீயை அடையும் போது தான் பூமிக்கு நெருக்கமாக வருகிறது.

சூப்பர் நிலவு:

பூமியைச் சுற்றி வரும் நிலவு, பூமிக்கு மிக அருகில் வரும் போது நாம் பார்க்கும் நிலவானது, வழக்கத்தை விட பெரியதாக இருக்கும். அதாவது வழக்கமாக தெரியும் நிலவை விடவும் 14 மடங்கு பெரியதாக தெரியும். இதனைத் தான் சூப்பர் நிலவு என்று அழைக்கிறோம். பொதுவாக சூப்பர் நிலவு பௌர்ணமி நாட்களில் தான் தோன்றும்.

சூப்பர் ப்ளூ மூன்:

சூப்பர் நிலவைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது, சூப்பர் ப்ளூ மூனைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா என்ன! பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நாளில், அதன் பிரகாரத்தில் சற்று வித்தியாசம் தெரியும். அதாவது நீல நிறத்துடன் நிலவு பிரகாசிக்கத் தொடங்கும். நிலவுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் தொலைவு குறைவாக இருந்து, நிலவு நீல நிறத்தில் பிரகாசித்தால் அதனை சூப்பர் ப்ளூ மூன் என்று அழைக்கிறோம். இந்த நாளில் நிலவின் பிரகாசம் வழக்கத்தை விட 30% அதிகமாக இருக்கும்.

பௌர்ணமியில் வானில் தோன்றும் இந்த சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வை பொதுமக்கள் பலரும் வெறுங்கண்களால் காண முடியும். கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி சூப்பர் நிலவு தோன்றியது. தற்போது நடப்பாண்டில் பௌர்ணமியான நேற்று (ஆகஸ்ட் 19) வானில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றியுள்ளது. இந்த மூன் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வானில் தெரியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ப்ளூ மூன் பெயர்க்காரணம்:

1883 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் க்ரகடோவா என்ற எரிமலை வெடித்ததில், அதன் சாம்பல் சுமார் 80கிமீ உயரத்திற்கு பறந்தது. அப்போது மைக்ரான் அளவுள்ள சாம்பல் துகள்கள் சேர்ந்து வானை மறைத்து விட்டது. அன்றைய தினம் முழு நிலவு தோன்றிய பௌர்ணமி. துகள்களின் எதிரொலியில் நிலவு நீல நிறமாக காட்சியளித்தது. இதனால் நிலவை ப்ளூ மூன் என்று அழைத்தனர். இந்தப் பெயரைத் தான் பூமிக்கு அருகில் நிலவு வரும்போது விஞ்ஞானிகள் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

மகாலட்சுமி தாயாருக்கு தீபாவளி சீர் கொடுக்கும் ஆலயம் எங்குள்ளது தெரியுமா?

சந்தையில் வலம் வரும் போலி பனீர்… ஜாக்கிரதை மக்களே! 

தார்வாட் பேடா: கர்நாடகாவின் சுவை நிறைந்த இனிப்பு!

நாங்கள் கொண்டாடிய சாகச தீபாவளி!

நாக்கில் உள்ள புண்ணை விரைவில் குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகள்! 

SCROLL FOR NEXT