போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் ஜூன் அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். முன்னரே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின்படி இருவரும் எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இப்போது அவர்கள் எட்டு மாதங்கள் விண்வெளியில் இருக்கப் போகிறார்கள்.
அவர்களுக்கான உணவை அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் ஸ்பேஸ் சென்டரின் ஸ்பேஸ் ஃபுட் சிஸ்டம்ஸ் ஆய்வகத்தில் உணவு விஞ்ஞானிகள் உணவியல் நிபுணர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள். உணவின் ஊட்டச்சத்து கெட்டுப் போகாத தன்மை மற்றும் பேக்கேஜிங் குறித்த பல்வேறு வகையான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் இந்த ஆய்வகத்தில் செய்யப்படுகின்றன.
நான்கு வகையான உணவுகள் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றன.
ரீஹைட்ரேட்டபிள் (என்பது உலர்ந்த உணவைக் குறிக்கிறது. இதில் தண்ணீரைச் சேர்த்து உண்ணவேண்டும். உதாரணமாக காய்கறிகள் அல்லது சாலட்)
மற்றொரு வகை தெர்மோஸ்டேபிலைஸ்ட் உணவுகள். (அதாவது ஏற்கனவே சமைக்கப்பட்டு பின்னர் சூடுபடுத்தி உண்ணக் கூடிய உணவுகள்)
மூன்றாவது வகை கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்ட உணவு. இவ்வாறு செய்வதால் உணவில் உள்ள நுண்ணுயிர்கள் நீக்கப்பட்டு உணவு நீண்ட நேரத்திற்கு கெடாத வகையில் இருக்கும். இதில் கேன்களில் அடைக்கப்பட்டு வழங்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை அடங்கும்.
நான்காவது வகை இயற்கை உணவு. அதாவது கோதுமை அல்லது சோளத்திலிருந்து செய்யப்படும் ரொட்டி மற்றும் சோளக் கம்புகள் போன்றவை. இத்தகைய உணவுகள் எளிதில் கெட்டுப் போகாதவாறும் விண்வெளி வீரர்களால் நீண்ட நேரம் சாப்பிடக்கூடிய வகையிலும் பிரத்யேகமாக பேக் செய்யப்பட்டிருக்கும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும்போது விண்வெளி வீரர்களுக்கான மெனு எட்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது. ஊழியர்களுக்கான மெனுவில் அமெரிக்கன் மற்றும் ரஷ்யன் உணவுகள் சரிசமமாக இருக்கும். மற்ற நாடுகளின் உணவுகளும் மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளன.
உணவுகள் தயாரான பிறகு டிரே லாக்கர்கள் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திற்கு விண்கலம் புறப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக அனுப்பப்படும். இங்கே அது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படுகிறது. விண்ணில் ஏவப்படுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் உணவு டிரேக்கள் விண்வெளி ஓடத்தில் வைக்கப்படும்.
உணவு டிரேக்களுடன் விண்வெளி வீரர்களுக்கான உணவைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் உணவு லாக்கரும் விண்கலத்திற்குள் வைக்கப்படும். இந்த உணவு லாக்கருக்கு உள்ளே ரொட்டிகள் ரோல்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை இருக்கும். விண்கலம் ஏவப்படுவதற்கு முதல் மணி நேரத்திற்கு முன்பு இந்த உணவு லாக்கர்களில் வைக்கப்படும்.
கூடுதல் உணவு டிரேக்களும் விண்கலத்தின் உள்ளே வைக்கபடும். ஒவ்வொரு விண்வெளி வீரருக்குமான கூடுதல் உணவு டிரேவில் ஒரு நாளைக்கான மூன்று வேளை உணவு இருக்கும்.
விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு என்ற வரிசையில் உணவுகள் பிரித்து வைக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பூமியில் இருந்து உணவுகளை எடுத்துக் கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி ஓடம் பறக்கிறது.
கழிவுகள் ஆளில்லா சரக்கு விண்கலமான புரோகிரஸ் விண்கலத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. பின்னர் இந்த புரோகிரஸ் விண்கலம் பூமியை நோக்கி அனுப்பப்படும். பூமியின் வளிமண்டலத்தில் இந்த விண்கலம் நுழையும் போது கழிவுகள் விடுவிக்கப்படும். வளிமண்டல வெப்பம் அவற்றை முழுமையாக எரித்துவிடும்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளது. இந்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸும் வில்மோரும் திரும்புவார்கள் என நாசா கூறியுள்ளது.