கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் OpenAI நிறுவனம் மற்றும் அதன் தலைமைச் செயல் அதிகாரியான Sam Altman-க்கு எதிராக எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கை அவசர அவசரமாக வாபஸ் பெறுவதாக எலான் மஸ்கின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ChatGPT செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய OpenAI நிறுவனம் மற்றும் அதன் சிஇஓ சாம் அல்டன் மீது, மனித குலத்தின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் நோக்கத்தை அவர்கள் கைவிட்டதாகக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரிப்பதற்கு இன்று நீதிபதி தயாராக இருந்த நிலையில், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என எலான் மஸ்கின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இப்படி அவசர அவசரமாக வாழ்க்கை வாபஸ் பெறுவதற்கு என்ன காரணம்? என்பது குறித்த எந்தத் தகவல்களும் வெளிவரவில்லை.
OpenAI நிறுவனத்தின் தொடக்க காலத்தில் எலான் மஸ்க் ஆதில் பங்குதாரராக இருந்தார். அவர் இணைந்துதான் அந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர் அந்நிறுவனத்திற்கு மைக்ரோசாப்ட் பில்லியன் கணக்கான டாலர்களை நிதி உதவியாக வழங்கியதன் மூலம் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்கும் தலைசிறந்த நிறுவனமாக மாறியது.
பின்னர் சில காரணங்களால் எலான் மஸ்க் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். வெளியேறியதும் அந்த நிறுவனத்திற்கு எதிராக பேச ஆரம்பித்தார். அவர்கள் மனித குலத்திற்கு நன்மை புரியும் சாதனங்களை உருவாக்கும் கொள்கைகளில் இருந்து மீறிவிட்டதாக குற்றம் சாட்டினர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலையில் எலான்மஸ் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAIஐ நிறுவினார். இந்த நிறுவனம் இரண்டே மாதங்களில் 6 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியைத் திரட்டி 24$ பில்லியன் மதிப்பை எட்டியது.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது அவர் தொடுத்த வழக்கை ஏன் அவசர அவசரமாக வாபஸ் வாங்க வேண்டும்? இதன் பின்னால் உள்ள காரணம் என்ன? ஒருவேளை எலான் மஸ்க் பயந்துவிட்டாரா? என் பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கான உண்மையான காரணம் என்னவென்று எலான் மஸ்க் கூறினால்தான் நமக்குத் தெரிய வரும். தற்போது இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.