Elon Musk's Mars plan. 
அறிவியல் / தொழில்நுட்பம்

எலான் மஸ்கின் செவ்வாய் கிரகத் திட்டம் பற்றி தெரியுமா? 10 லட்சம் பேர் தயாராக இருங்கள்!

கிரி கணபதி

செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மக்களை குடியமர்த்தும் திட்டத்தை வெளியிட்டு எலான் மாஸ்க் அதிர்ச்சி அளித்துள்ளார். 

உலகப் பணக்காரர்களில் ஒருவரான டெக் ஜாம்பவான் எலான் மஸ்க், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி, செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மக்களை குடியமர்த்தும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் குறித்த முழு விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை என்றாலும், இதன் மூலமாக எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் நிச்சயம் வாழ்வார்கள் என்பது தெளிவாகிறது. 

இந்த அறிவிப்பால் விண்வெளி ஆய்வாளர்களின் விண்வெளி சார்ந்த தேடுதல்களை எலான் மாஸ்க் ட்ரிகர் செய்துள்ளார். இவருடைய இலக்கில் செவ்வாய் கிரகம் இருப்பது இது முதல் முறை அல்ல. இவரது விண்வெளி நிறுவனமான SpaceX தொடங்கப்பட்டதே வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ வைப்பதை நோக்கமாகக் கொண்டுதான். இந்நிறுவனத்தின் கனவு இப்போது ஒரு திட்ட வடிவமாக மாறியுள்ளது. 

செவ்வாய் கிரக சிக்கல்கள்: 

செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும் திட்டமானது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இதில் பல சிக்கல்கள் உள்ளன. இதில் முதல் சிக்கலாகப் பார்க்கப்படுவது பணம்தான். எலான் மஸ்கின் இந்த திட்டத்தை செயல்படுத்த ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படும். அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைக்கும் என்பதில் எவ்வித தெளிவும் இல்லை. 

ஒருவேளை எப்படியாவது செவ்வாய் கிரகத்திற்கு சென்றுவிட்டாலும், அங்கிருக்கும் சுற்றுச்சூழல் நமக்கு ஒத்துவருமா என்பது தெரியாது. முதலில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். குறிப்பாக தண்ணீர், காற்று போன்றவற்றின் தேவை அதிகம் என்பதால் இது மிகப் பெரிய சிக்கலான விஷயமாகும். 

செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டிகளாக இருக்கும் தண்ணீரை உருக்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், உணவு உற்பத்தி கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றிற்கு வளங்கள் தேவை. இதற்கு என்ன செய்வார்கள் என்பதும் தெரியவில்லை. 

உண்மை என்ன? இந்தத் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு சிலர், பணக்காரர்கள் பூமியில் உள்ள பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க நினைப்பதன் முயற்சிதான் இத்திட்டம் என்கின்றனர். ஆனால் இதை முற்றிலும் மறுக்கும் எலான் மஸ்க், பூமியை காப்பதற்கான முயற்சி என்றே கூறுகிறார். 

ஏற்கனவே பலர் முடியாது என்று சொல்லிய திட்டங்களை செய்து காட்டிய எலான் மஸ்க், இத்திட்டத்தில் வெற்றி பெறுவாரா மாட்டாரா என்பதை இப்போது நம்மால் கணிக்க முடியாது. ஆனால் இந்த முயற்சி விண்வெளி ஆய்வுத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. 

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT