AI Technology. 
அறிவியல் / தொழில்நுட்பம்

வேலையை பறிக்குமா AI? மக்கள் எண்ணம் என்ன?

க.இப்ராகிம்

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேலை பறிபோகும் சூழல் உருவாகுவதாக பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவிப்பதாக பெங்களூரைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களினுடைய அறிமுகம் மனிதர்களுடைய வேலைப்பளுவை குறைத்து இருப்பதோடு, வேலையை முடிப்பதற்கான கால அளவையும் குறைத்து இருக்கிறது. இவ்வாறான தொழில் வளர்ச்சி தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் உற்பத்தியை மேற்கொள்ள உதவியாக இருந்தது. ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று பெங்களூரைச் சேர்ந்த HERO VIRED என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்நிறுவனம் இந்தியா முழுவதும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என்று ஒரு லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யக்கூடிய பெரும் பகுதி வேலைகளை ஆக்கிரமித்துக் கொள்ளும், இதனால் வேலை இழப்பு ஏற்படும் என்று பயத்தில் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இருக்கின்றனர். இவ்வாறு 83 சதவீதம் மக்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டுமே தவிர மக்களுக்கு ஆபத்தானதாக இருக்கக் கூடாது. ஆனால் ஏஐ தொழில்நுட்பம் வேலையை சுலபமாகவும், எளிதாகவும், விரைவாகவும் செய்கின்றேன் என்ற பெயரில் பல நபர்களினுடைய வேலைகளை ஆக்கிரமிக்க கூடும். இதனால் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகள் நெருக்கடியை சந்திக்கும் என்று 70 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆய்வு மேற்கொண்ட ஒரு லட்சம் நபர்களில் 78 சதவீத பேர் வேலையில் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் வேலை வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று கூறியிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

குழந்தைகளை சுதந்திரமாக விளையாட ஏன் அனுமதிக்க வேண்டும் தெரியுமா?

ஹாலிவுட்டில் நடித்த நெப்போலியன்… அதுவும் இத்தனை படங்களிலா?

உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாதுன்னா இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க!

நாவூர வைக்கும் முருங்கைக்கீரை தொக்கு- காலிஃபிளவர் பெப்பர் ஃப்ரை ரெசிபிஸ்!

சொன்னதை செய்து முடித்த திலக் வர்மா… சூர்ய குமார் யாதவ் பகிர்ந்த ரகசியம்!

SCROLL FOR NEXT