Google Chrome VPN 
அறிவியல் / தொழில்நுட்பம்

கூகுள் குரோம் VPN பற்றி தெரியுமா? 

கிரி கணபதி

குரோம் போன்ற தேடுபொரியில் ஒருவர் என்னென்ன விவரங்களைத் தேடுகிறார் என்பதை அவரின் தனிப்பட்ட IP முகவரி கொண்டு அறிய முடியும். இதை பிறருக்குத் தெரியப்படுத்தாமல் இருக்க VPN செயலியைப் பயன்படுத்தி அதை மறைக்கலாம். இத்தகைய செயலிகள் உண்மையான ஐபி முகவரியை மறைத்து போலியான ஐபி முகவரியை உருவாக்குகிறது. எனவே இதனால் ஒருவர் இந்தியாவில் இருந்து கொண்டே வெவ்வேறு நாடுகளில் உள்ளது போல ஐபி முகவரியை மாற்ற முடியும். 

இதுவரை குரோம் பிரவுசரில் ஐபி முகவரியை மறைக்க மூன்றாம் தரப்பு VPN செயலிகளையே மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது VPN இல்லாமலேயே ஐபி முகவரியை மறைக்கும் புதிய அம்சத்தை கூகுள் குரோம் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக முதற்கட்டமாக வலைதளங்களில் போலியான ஐபி முகவரியைப் பயன்படுத்தும் அம்சத்தை குரோம் சோதித்து பார்க்க உள்ளது. இதனால் குரோம் பயன்களின் இணையதள செயல்பாட்டை கண்காணிப்பது மற்றும் அவர்களின் தரவுகளை சேகரிப்பது போன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும். 

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் மூத்த மென்பொருள் பொறியாளர் ப்ரியானா கூறுகையில், " போலி ip முகவரியை பயனர்கள் பயன்படுத்துவதற்கான முதற்கட்ட சோதனைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். முதற்கட்டமாக ஜிமெயில், கூகுள் விளம்பர சேவை உள்ளிட்ட டொமைன்களுக்கு இந்த சேவை வழங்கப்பட உள்ளது. ஆனால் அனைத்து இணையதளங்களில் இருந்தும் பயனர்களின் ஐபி முகவரியை மறைப்பதுதான் எங்களின் நோக்கம் அல்ல. பயனர்களின் தரவுகளை சேகரிக்கும் இணையதளங்களில் மட்டும் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதே எங்களின் இலக்கு" எனத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான சோதனை முதற்கட்டமாக அமெரிக்காவில் தொடங்கப்பட உள்ளது. அதே நேரம் இந்த அம்சத்தால் பல பாதிப்புகள் ஏற்படும் என்பதால், ஐபி முகவரியைக் கொண்டு நடக்கும் செயல்பாடுகளுக்கு எந்த இடையூறும் வராத வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது மட்டும் வெற்றியடைந்தால் கூகுளின் இணைய சேவைகள் மட்டுமின்றி மற்ற நிறுவனங்களின் இணைய சேவைக்கும் போலி ஐபி முகவரி அணுகல் விரிவு செய்யப்படும் என கூகுள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய அம்சத்தால், 3rd பார்டி குக்கீக்களால் ஏற்படும் இடையூறுகளை கட்டுப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது. 

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT