Google maps gets new features Img credit: freepik
அறிவியல் / தொழில்நுட்பம்

புதிய அவதாரம் எடுக்கும் கூகுள் மேப்ஸ்

மணிமேகலை பெரியசாமி

20 வருடங்களுக்கு முன்பு, புதிதாக ஒரு இடத்திற்குச் செல்ல வழி தெரியவில்லை என்றாலோ, தொலைந்து போனாலோ, ஆட்டோ ஓட்டுநர்கள் அல்லது அக்கம்பக்கத்தில் உள்ள மனிதர்களிடம் வழி கேட்டுப் போவதுண்டு. ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில், முதலில் நாம் தேடுவது கூகுள் மேப்ஸாகத்தான் இருக்கும். பெருநகரங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் கூட கூகுள் மேப்ஸை பயன்படுத்திதான் சவாரி செய்கின்றனர். என்னதான் டெக்னாலஜி பல விதங்களில் நம்முடைய வேலையை எளிதாக்கினாலும், செயற்கையாக உருவாக்கப்பட்ட எல்லா கண்டுபிடிப்புகளுமே ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள், பழமையாவதும், தற்காலிகமாக செயலிழந்து போவதும் இயல்பு தானே. எனவே, இவற்றை சரி செய்வதற்காக டெக்னாலஜியில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. அதனடிப்படையில், சமீபத்தில் கூகுள் நிறுவனம் 6 புதிய அம்சங்களை கூகுள் மேப்ஸில் அறிமுகப்படுத்தி உள்ளது.

1. AI-இயங்கும் குறுகிய சாலை தவிர்ப்பு :

செயற்கைக்கோள் படங்கள், ஸ்ட்ரீட் வியூ மற்றும் பிற தரவுகளைப் பயன்படுத்தி, சாலையின் அகலம் மதிப்பிடப்பட்டு, குறுகிய மற்றும் நெரிசலான பகுதிகளை ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ரூட்டிங் அல்காரிதங்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முதலாவதாக, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட எட்டு நகரங்களில் விரிவாக்கத் திட்டங்களுடன் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது.

2. ஃப்ளைஓவர் வழிநடத்துதல்:

'கூகுள் மேப்ஸ் காட்டும் மேம்பாலத்தில் செல்லலாமா? வேண்டாமா?' என்ற வாகன ஓட்டிகளின் சந்தேகத்தை அகற்றும் வகையில், இந்தியாவில் 40 நகரங்களில் பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களில் உள்ள மேம்பாலங்களை கூகுள் மேப் முன்னிலைப்படுத்தி காட்ட உள்ளது.

3. மெட்ரோ டிக்கெட் முன்பதிவு:

ONDC மற்றும் நம்ம யாத்ரி மூலம் இயக்கப்படும் மெட்ரோ டிக்கெட் முன்பதிவுகளை இனி கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக பயனர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

4. EV சார்ஜிங் நிலையங்கள் ஒருங்கிணைப்பு:

முன்னணி EV சார்ஜிங் வழங்குநர்களுடன் Google இணைந்து, 8,000க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்கள் பற்றிய தகவல்களை கூகுள் மேப்ஸில் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. இந்த அம்சத்தினால், கூகுள் மேப்பில் இரு சக்கர வாகன EV சார்ஜிங் நிலையங்களைக் கொண்ட முதல் நாடாக இந்தியா திகழப்போகிறது.

5. தொகுக்கப்பட்ட உள்ளூர் பரிந்துரைகள்:

உள்ளூர் நிபுணர்களுடன் Google இணைந்து பத்து முக்கிய நகரங்களின் சுற்றுலாத் தலங்களில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட இடங்களின் பட்டியலை இணைக்க உள்ளது.

6. பயனர் உள்ளடக்க மேம்பாடு: (User Generator Content)

சாலை விபத்துகள் பற்றி புகாரளித்தல் மற்றும் தகவல் பகிர்தல் போன்றவற்றை எளிதாக்கும் வகையில் பயனர் உள்ளடக்கத்தில் மேம்பாடுகளை செய்துள்ளது.

போக்குவரத்து சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஆண்ட்ராய்டு, iOS, Android Auto மற்றும் Apple CarPlay சாதனங்களில் புதிய அம்சங்கள் படிப்படியாக வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT