நம் பூமி போன்ற ஒரு கிரக - நிறை பொருள்கள் அடங்கிய நிலப்பரப்பில் அதன் அடியில் உண்டாகும் வெப்பத்தைப் போக்கும் ஒரு செயலைத்தான் இந்த எரிமலை செய்கிறது. இது சூடான எரிமலை குழம்பு, எரிமலை சாம்பல் மற்றும் வாயுக்களை மேற்பரப்புக்கு கீழே உள்ள MAGMA அறையிலிருந்து வெளியேற்றும். இந்த MAGMA என்பது திரவ நிலையில் இருக்கும் உருகிய பாறைகள். இது பல நேரங்களில் வெடிக்கும் தன்மைகொண்டதாக இருக்கும். அந்த நேரத்தில் வானத்தில் உயரமான பொருட்களை உந்தித் தள்ளும் அளவுக்கு அதில் அழுத்தம் உண்டாகும். அல்லது உருகிய சில பாறை பொருட்களின் மென்மையான பாய்ச்சலுடன் அடங்கி கொப்பளித்துக் கொண்டும் இருக்கும். எரிமலைகள் வெடிக்கும் நேரத்தில் குன்றுகள் நிறைந்த கரடுமுரடான பாதைகளை ஆங்காங்கே உருவாக்குகின்றன. பாறை மற்றும் சாம்பல் அடுக்குகள் மீண்டும் மீண்டும் வெடிப்பதால் இவை சின்ன சின்ன மலை குன்றுகள்போல் ஆங்காங்கே உருவாகத் தொடங்கும். எரிமலைகள் அநேகமாக Tectonic தட்டுகள் அதிகம் நகரும் இடங்களில் காணப்படும்.
1. வெப்பச்சலனம் மற்றும் MAGMA உருவாக்கம்:
* வெப்பமானது பூமியின் உட்புறத்திலிருந்து மேற்பரப்புக்கு வர முயற்சிக்கும். இதுதான் எரிமலையின் முதன்மையான வெடிப்பின் காரணமே. இந்தச் செயல் வெப்பசலனத்தால் நடக்கிறது. இந்தச் செயல் முறையானது ஒரு சூடான திரவத்தின் மூலமாக வரும், அது MAGMA அல்லது ஓரளவு உருகிய பாறை நிலையில் இருக்கும்.
* பூமியின் மேலோடில் இருக்கும் பாறையைவிட ஓரளவு உருகும் நிலையில் இருக்கும் பாறையால்தான் MAGMA உருவாகிறது. இது சுற்றியுள்ள கனமான பாறையைவிட சற்று இளகி, திரவ நிலையில் இருப்பதால் மேற்பரப்பை நோக்கி வேகமாக உயர்கிறது. அதுதான் இறுதியில் வெடித்து சிதறுகிறது.
2. Tectonic தட்டுகள் மற்றும் Subduction மண்டலங்கள்:
* பெரும்பாலான எரிமலைகள் Tectonic தட்டுகள் செயல்பாட்டுடன் தொடர்புடையவை. உதாரணமாக, ஜப்பான், ஐஸ்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் உள்ள எரிமலைகள் பூமியின் மேற்பரப்பில் நிகழும் சில அதிர்வுகளால் ஏற்படும் வெடிப்புகள் வழி வெளிப்படுகின்றன.
* ஒரு தட்டு மற்றொன்றின் கீழ் சறுக்கும் போது (அந்த செயலைத்தான் Subduction என்பார்கள்), சறுக்கும் தட்டோடு வரும் நிலத்தடி நீர் அபரிமிதமான அழுத்தம் காரணமாக பிழியப்படுகிறது. இந்த அழுத்தம் அருகிலுள்ள பாறைகளை உருக்குவதற்கு போதுமான வெப்பத்தை உருவாக்கும். இதுதான் இறுதியில் MAGMAவை உருவாக்குகிறது.
* சுற்றியுள்ள பாறையை விட MAGMA அதிக மிதக்கும் நிலையில் இருப்பதால், அது உயரும்போது மேற்பரப்பில் இருக்கும் சில இடைவெளிகளில் சிறு சிறு அறைகளில் (chambers) சேகரிக்கப்படும்.
3. அறை அழுத்தம் மற்றும் வெடிப்பு:
* MAGMA சில அறைகளில் நிரம்பும்போது, எரிமலையின் உள்ளே அழுத்தம் அதிகரிக்கிறது. அறைக்கு மேலே உள்ள பாறையின் எடையால் வரும் கீழ்நோக்கிய அழுத்தம், கீழே உள்ள உருகிய நிலையில் இருக்கும் பாறையில் இருந்து வெளிப்படும் மேல்நோக்கிய அழுத்தத்தை விட குறைவாக இருக்கும்போது, அடிக்கடி விரிசல்கள் மேலே உருவாகின்றன.
* இறுதியில், மேல்நோக்கிய அழுத்தம் MAGMAவை இந்த விரிசல்கள் வழியாகவும், மேற்பரப்பில் உள்ள இடைவெளி மூலமாகவும் வெளியே தள்ளுகிறது, அதுதான் எரிமலைக் குழம்பு ஆகிறது. அதைத்தான் LAVA என்பார்கள்.