Ration Card. 
அறிவியல் / தொழில்நுட்பம்

ரேஷன் கார்டு பெற இணைய வழியில் விண்ணப்பிப்பது எப்படி?

க.இப்ராகிம்

ரேஷன் கார்டுகளை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பது எப்படி.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் பிரதான ஆவணங்களில் ஒன்று ரேஷன் கார்டு. இதை மாநில அரசாங்கங்கள் தங்களுக்கு ஏற்ப வழங்கி வருகின்றன. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது விநியோக அமைப்பின் மூலமாக மானிய விலையில் அல்லது விலையில்லாமல் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக ரேஷன் கார்டு பிரதான ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டு மூலம் அரசியல் பல்வேறு வகை நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டுகளில் சம்பந்தப்பட்ட நபரின் பொருளாதார நிலையை குறிப்பிடும் வகையில் வண்ணங்கள் அல்லது தகவல்கள் இருக்கும். தமிழ்நாட்டில் தற்போது ஸ்மார்ட் கார்டுகளாக ரேஷன் கார்டுகள் மாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படி பல்வேறு தேவைகளுக்கு பிரதானமாக உள்ள ரேஷன் கார்டை பெற இணைய வழியில் பெற எளிய முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு முதலில் https://nfsa.gov.in/ என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். பிறகு சிங் இன் / ரிஜிஸ்டர் என்பதை தேர்வு செய்ய வேண்டும். பப்ளிக் லாகின் கொடுத்து, காமன் ரிஜிஸ்ட்ரேஷன் பெசிலிட்டி என்பதை தேர்வு செய்ய வேண்டும். நியூ யூசர் சிங் அப் ஹேர் என்பதை தேர்வு செய்து, கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தொடர்ந்து எண் மற்றும் எழுத்துக்களை அடக்கிய லாகின் ஐடியை கொடுக்க வேண்டும். ஐ டி அவைலபிலாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க செக் யூசர் என்ற பக்கம் சென்று பார்வையிட வேண்டும். அதில் கிரீன் டீக் இருக்கும் பட்சத்தில் ஐடி அவைலபிலாக இருக்கிறது என்று அர்த்தம்.

இதன் தொடர்ச்சியாக பாஸ்வேர்டை பதிவு செய்து, முகவரி மற்றும் ஆதார் எண்களை தெளிவாக பதிவு செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள கேப்ஷின் குறியீடுகளை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு நிபந்தனை கட்டங்களையும் டிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து சப்மிட் செய்தால் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி-யை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு இணைய வழியாக பதிவு செய்ய முடியும்.

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT