Mobile Phones  
அறிவியல் / தொழில்நுட்பம்

தொலைந்த போனை கண்டுபிடிக்க இப்படி ஒரு வசதி இருக்கா!

ரா.வ.பாலகிருஷ்ணன்

உங்க மொபைல் போன் தொலைந்து விட்டதா! இனி கவலையை விடுங்கள். கண்டுபிடிக்க புதிய வசதியை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் தொலைந்து போன மொபைல் போன்களை மிக எளிதில் கண்டுபிடித்து விடலாம்; அதோடு, குற்ற சம்பவங்களையும் தடுத்து விடலாம். அப்படி என்ன வசதி அது! வாங்க தெரிந்து கொள்ளலாம்.

தொழில்நுட்ப வசதிகள் பெருகி விட்ட இன்றைய நிலையில், காணாமல் போன பொருள்களை வெகு விரைவாக கண்டுபிடித்து விடலாம். இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாத ஒருவரைக் காண்பது கூட அரிது தான். மொபைல் போன்களில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்க, மொபைல் போன் விற்பனையும், பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மொபைல் போன் தொலைந்து விட்டால் பொதுவாக ஐஎம்இஐ (IMEI) எண்ணை வைத்து தான் கண்டுபிடிப்பார்கள். ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனித்தனியே ஐஎம்இஐ எண் இருக்கும். ஆனால், தொலைந்து போன ஒரு போனின் ஐஎம்இஐ எண் மாற்றப்பட்டு விட்டால், மொபைல் போனைக் கண்டுபிடிப்பது சாத்தியமா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. ஏனெனில் இப்போதெல்லாம் மொபைல் போன் திருடு போனாலோ அல்லது தொலைந்து போனாலோ அந்த போனை எடுக்கும் நபர்கள், உடனடியாக ஐஎம்இஐ எண்ணை மாற்றி விடுகின்றனர். இதனால் மொபைல் போனை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

மொபைல் போன் தொலைந்து விட்டால், ஒருசிலர் மட்டுமே காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்கின்றனர். இப்படி தொலைந்த போன்களை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் தவறான செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் உங்கள் போன் தொலைந்து விட்டால், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்.

சிஇஐஆர் திட்டம்:

தொலைந்து போன போனின் 15 இலக்க ஐஎம்இஐ எண் மாற்றப்பட்டாலும் அதனைக் கண்டுபிடிக்க மத்திய அரசு அமல்படுத்தியுள்ள திட்டம் தான் CEIR (மத்திய உபகரண அடையாள பதிவு - Central Equipment Identity Register) திட்டம். இத்திட்டத்தின் மூலம், ஐஎம்இஐ எண் இந்தப் பதிவேட்டில் பதிவாகி விடும். ஐஎம்இஐ எண்ணில் ஒரு ரகசிய குறியீடு இருக்கும். மர்ம நபர்கள் இஎம்இஐ எண்ணை மாற்ற முயற்சிக்கும் போது, இந்தக் குறியீடு இஎம்இஐ எண் தவறு என சிஇஐஆர் பதிவேட்டிற்கு குறுந்தகவலை அனுப்பும். மேலும், அந்த நபரின் இருப்பிடமும் தெரிந்து விடும். மொபைல் போன் தொலைந்ததன் பேரில் புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையத்திற்கு சிஇஐஆர் அனைத்துத் தகவல்களையும் அனுப்பி விடும். ஆகையால், இனி இஎம்இஐ எண்ணை மாற்றினால் கூட மொபைல் போனை கண்டுபிடித்து விடலாம்.

மொபைல் போன் தொலைந்து விட்டால், பழைய போன் தானே போனால் போகட்டும் என்று இனி அலட்சியமாக இருந்து விடாதீர்கள் மக்களே! நம்முடைய சிறு அலட்சியம் கூட பின்னாட்களில் நம்மை பாடாய்படுத்தும். குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் இதுமாதிரியான போன்களைத் தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்று சைபர் கிரைம் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. ஆகையால் முதல் வேலையாக காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT