HP Spectre X360  
அறிவியல் / தொழில்நுட்பம்

HP நிறுவனத்தின் Spectre X360 லேப்டாப்பின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

கிரி கணபதி

சில தினங்களுக்கு முன்பு HP  நிறுவனம் Spectre X360 சீரிஸ் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த லேப்டாப்பின் சிறப்புகள் மற்றும் விலை என்னவென்று இந்த பதிவில் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். 

இந்த லேப்டாப்பைப் பொறுத்தவரை AI இன்டெல் கோர் அல்ட்ரா ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சந்தையில் உள்ள மற்ற பிராசஸர்களை விட சிறப்பானதாகும். 14 மற்றும் 16 இன்ச் QLED டிஸ்ப்ளேக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பில், பல புதிய அம்சங்களும் உள்ளன. விண்டோஸ் 11 OSல்  இயங்கும் இந்த லேப்டாப்பில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 

இதன் சிறப்பம்சம் எனப் பார்க்கப் போனால் இந்த லேப்டாப்பின் ப்ராசஸர்ரைதான் முதலில் சொல்ல வேண்டும். முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ப்ராசஸர், கணினியின் செயல்பாடுகளை தானாகவே கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் திறன் கொண்டது. இப்படி அதிநவீனமாக இருப்பதால் இது அதிகமாக பேட்டரியை செலவழிக்கும் என பயப்பட வேண்டாம். AI அம்சம் மூலமாக உங்களது வேலைகள் எளிமையாகி, கணினிக்கு அதிக அழுத்தமின்றி செயல்படுகிறது. இதனால் பேட்டரியும் விரைவாகக் குறைவதில்லை. 

32 ஜிபி ரேம் மற்றும் 2 TB எஸ்எஸ்டி வசதியுடன் கிடைக்கும் இந்த லேப்டாப்பில், உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப முழுவதும் Intel Arc GPU மூலமே இயங்கும்படியாகவும் அல்லது அதிகமாகப் பயன்படுத்த விரும்பினால் RTX 4050 GPU மூலமாக இயங்கும்படி நாம் விருப்பம் போல் தேர்வு செய்து பயன்படுத்தலாம். ஆப்பிள் நிறுவனம் போல கட்டுப்பாடுகள் விதிக்காமல், USB C Port, ஹெட்போன் ஜாக், HDMI 2.1, WIFI 6e, Bluetooth 5.3, 9MP Front camera என அனைத்து வசதிகளையும் கொடுத்துள்ளது. குறிப்பாக லேப்டாப்பை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் அடாப்டரும் கொடுக்கப்படுகிறது. 

இப்படி லேப்டாப்புக்கு தேவையான எல்லா அம்சங்களையும் கொண்ட HP Spectre X360 14 இன்ச் மாடலின் விலை 1,64,999 ரூபாய்க்கும், 16 இன்ச் மாடலின் விலை 1,79,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை சற்று அதிகமாகத் தோன்றினாலும் இதன் அம்சங்களுக்கு இந்த விலை ஏற்றது போலதான் தெரிகிறது. இந்த லேப்டாப்பை நீங்கள் வாங்க விரும்பினால் இணையத்திலோ அல்லது நேரடியாக கடைகளிலோ வாங்கிக் கொள்ளலாம். 

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT