அறிவியல் / தொழில்நுட்பம்

முத்தத்தை பரிமாறும் மிஷின்.

கிரி கணபதி

சீனாவின் கண்டுபிடிக்கப்பட்ட புதிய சாதனம் ஒன்று, பயனர்களின் உதட்டின் வெப்பநிலை, அழுத்தம், இயக்கம் ஆகியவற்றை கணக்கீடு செய்து, அதைத் துல்லியமாக மறுமுனையில் பிரதிபலிக்கும் எனக் கூறப்படுகிறது. 

தொலைதூரத்தில் இருக்கும் தன் காதலன் அல்லது காதலியை மிஸ் பண்ணாமல் இருக்க வீடியோ கால் வசதியை அவர்கள் பயன்படுத்திக் கொள்வது அனைவரும் அறிந்த ஒன்றே. அதேபோல் வெவ்வேறு இடங்களில் இருக்கும் காதலர்கள் ஒன்றாக இணைந்து திரைப்படம் பார்க்க விரும்பினால், டெலி பார்ட்டி, க்ரோம் வாட்ச் பார்ட்டி, சீனர், சிங்கிள் பிளே போன்ற பல செயலிகள் உதவுகின்றன. 

ஆனால் காதலர்கள் அதிகமாக மிஸ் பண்ணும் இன்னொரு விஷயம்தான் முத்தம். தங்கள் அன்பின் வெளிப்பாடாக பாவிக்கும் முத்தத்தை, ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு கடத்தும் சாதனம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலையில், தற்போது சீனாவின் சான்சோவில் உள்ள பல்கலைக்கழகம் முத்தத்தைப் பரிமாறும் சாதனத்தை உருவாக்கியுள்ளது. இது உலக மக்களிடையே சமூக ஊடகங்களில் மிகப்பெரிய ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. 

தொலைதூர ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் காதலர்கள், தங்களின் முத்தங்களை இனி மெய்நிகர் தருணங்களாகப் பகிர்ந்து கொள்ள இந்த சாதனம் உதவும். இதில் சிலிக்கான் பயன்படுத்தி மனிதர்களின் உதடுகளைப் போலவே இருக்கும் ஓர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 'சிலிக்கான் லிப்ஸ்' உடன் சில சென்சார்கள் மற்றும் அச்சுவேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் உதடுகளின் இயக்கம், அழுத்தம் மற்றும் வெப்ப நிலையைக் கணக்கீடு செய்து, அதை மறுமுனையில் உள்ள சாதனத்தில் பிரதிபலிக்க முடியும். 

இந்த சாதனம் மூலமாக மனிதர்கள் நேரில் பரிமாறிக் கொள்ளும் உண்மையான முத்த உணர்வு கிடைக்கும் என சீனாவின் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த சாதனத்தின் விலை 288யென், அதாவது இந்திய மதிப்பில் 3433 ரூபாய் ஆகும். இதன் கண்டுபிடிப்பாளர் ஜியாங் ஜங்கிலிதான். லாங் டிஸ்டன்ஸ் உறவில் பல ஆண்டுகளாக இருப்பதால், இதை கண்டுபிடிப்பதற்கான உத்வேகம் வந்தது எனக் கூறியுள்ளார். 

இந்த சாதனத்தை பயன்படுத்த இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள மொபைல் அப்ளிகேஷனை பயனர்கள் பதிவிறக்கி, தனது மொபைல் போனுடன் இணைத்துக் கொள்ளலாம். இந்த செயலி மூலமாக இரண்டு காதலர்களும் இணையத்தில் இணைந்த பிறகு, வீடியோ கால் அழைப்பைக் கூட தொடங்கி, முத்தங்களை தொலைதூரத்தில் இருந்து பரிமாறிக் கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இச்செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது குறித்து பலரும் கலவையான விவாதங்கள் மற்றும் கருத்துக்களை கொடுத்து வருகிறார்கள். இந்த சாதனத்தை பலரும் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படப்போகும் சமூக நிலையை நினைத்துப் பார்த்தால், வருத்தமாக தான் இருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, அன்பின் பரிமாணமான முத்தத்தை ஒரு மெஷினில் அடக்கி விடமுடியுமா என்ன?

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT