Cobot 
அறிவியல் / தொழில்நுட்பம்

ரோபோட் தெரியும்; கோபோட் தெரியுமா?

S CHANDRA MOULI

னிதர்கள் செய்யும் வேலைகளை எளிதாகச் செய்து முடிக்கும் ரோபோட்கள் பற்றி நமக்கெல்லாம் தெரியும். ஆனால், கோபோட் என்றால் என்ன தெரியுமா? ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் மும்பையில் நடக்கவிருக்கும் ஆட்டோமேஷன் எக்ஸ்போ 2024 கண்காட்சிக்குப் போனால் தெரிந்துகொள்ளலாம்.

ஆம்! ஐ.ஈ.டி. கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் ஆட்டோமேஷன் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இந்த வருடத்தின் ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி மும்பையில் உள்ள மும்பை கண்காட்சி மையத்தில் அரங்கு எண் 1 & 2ல் வரும் ஆகஸ்ட் 21 முதல் 24 வரை நடைபெற உள்ளது. அதில் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் 500க்கும் அதிகமான அரங்குகள் இடம் பெறுகின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சியை லார்சன்&டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் (எரிசக்தி) மற்றும் உறுப்பினர் சுப்ரமணியன் சர்மா துவக்கி வைக்கிறார். மும்பையின் தொழில்துறை முன்னோடிகள் பலரும் இதில் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள்.

ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி

பாரம்பரிய ரோபோக்கள் செயல்திறன், எளிமையான இயக்கம் மற்றும் செலவுச் சிக்கனம் போன்ற பல காரணங்களுக்காக தொழில்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அண்மைக் காலமாக கோபோட்களின் வருகை உற்பத்தித் துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோபோட் என்றால் நமக்கெல்லாம் தெரியும். அதென்ன கோபோட்? கோபோட் என்பது கூட்டு ரோபோ என்பதன் சுருக்கம். இவற்றை துணை ரோபோ என்றும் சொல்வார்கள்.

வழக்கமான ரோபோக்கள் போலல்லாமல், கோபோட்கள் அதிக செயல் திறன் கொண்டவை; கனமான பணிகளுக்கு ஏற்றவை. மேலும், அவை தொழிலாளர்களுடன் இணைந்து செயல்படக் கூடியவை, பாதுகாப்பானவை.

ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி

மும்பையில் நடைபெறும் ஆட்டோமேஷன் எக்ஸ்போவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கோபோட்ஸ் ஆகியவை அனைத்துத் தரப்பினரது கவனத்தையும் ஈர்க்கும்.

இந்தக் கண்கட்சியினை நடத்தும் ஐ.ஈ.டி. கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் எம்.ஆரோக்கியசாமி ஆட்டோமேஷன் எக்ஸ்போ 2024 பற்றிக் கூறுகையில், "நாம் ஐந்தாவது தொழில்துறை புரட்சியின் உச்சத்தில் இருக்கிறோம். அங்கு டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ப்ராசஸ் ஆட்டோமேஷன் மற்றும் ஃபேக்டரி ஆட்டோமேஷன் ஆகியவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றில் ரோபோடிக்ஸ், குறிப்பாக கோபோட்ஸ் முக்கியப் பங்கு வகிக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

“இந்த எக்ஸ்போவின் தொடக்க விழாவினைத் தொடர்ந்து, முன்னணி தொழில்துறையினரின் முக்கிய உரை, நிபுணர்களுடன் சொற்பொழிவுகள், சி.ஈ.ஓ. நெட்வொர்க்கிங் இரவு, செயல்முறை ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் மற்றும் தொழிற்சாலை ஆட்டோமேஷன் பற்றிய மாநாடுகள், விருது விழா மற்றும் பல பணிப் பட்டறைகள், குழு விவாதங்கள் என ஏராளமான நிகழ்வுகள் நடைபெறும்” என்று கூறுகிறார் கண்காட்சியின் இயக்குனர் ஜோதி ஜோசப். இது குறித்த மேலும் தகவல்களுக்கு, www.automationindiaexpo.comஐ பார்வையிடலாம்.

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT