Optimus Robot 
அறிவியல் / தொழில்நுட்பம்

Optimus Robot: டெஸ்லாவின் அட்டகாசமான ரோபோ… 2025-ல் விற்பனைக்கு வருகிறதா? 

கிரி கணபதி

தொழில்நுட்ப ஜாம்பவான் எலான் மஸ்க் உலகிலேயே முதல் மனித உருவம் கொண்ட ‘ஆப்டிமஸ்’ என்ற ரோபோவை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், 2025 இல் இந்த ரோபோ விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது. 

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், X போன்ற நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் 2023ல் மனித உருவம் கொண்ட ரோபோக்களை உருவாக்கி வருவதாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது இந்த ரோபோக்கள் 2025 இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளார். தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் மற்றும் அபாயகரமான பணிகளைக் கையாளவும் டெஸ்லா ரோபோடிக்ஸ் துறையில் களமிறங்கும் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். 

ஏற்கனவே பல பிரபலமான ஜப்பானிய நிறுவனங்கள் மனித உருவ ரோபோக்களை பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் நிலையில், இந்த ஆண்டு BMW நிறுவனத்துடன், மைக்ரோசாப்ட் மற்றும் Nvidia ஆதரவு startup நிறுவனமான ‘ஃபிகர்’ கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளது. ஏற்கனவே எலான் மஸ்க் டெஸ்லா வணிகத்தில் ரோபோ விற்பனை செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி திறமையான ரோபோக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்தனர். 

ஆனால் எலான் மஸ்கின் எதிர்பார்ப்பு அந்த அளவுக்கு நிறைவேறவில்லை. எனவே அவர்களின் முதல் தலைமுறை மனித உருவ ரோபோவான Bumblebee-ஐ 2022ல் அறிமுகம் செய்தனர். அதேபோல இந்த ஆண்டு டெஸ்லாவால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ டீ-சர்ட் மதிப்பது போன்ற காணொளி வெளியிடப்பட்டது. எனவே கொஞ்சம் கொஞ்சமாக டெஸ்லா நிறுவனம் மனித உருவ ரோபோ உருவாக்கும் தொழில்நுட்பத்தில் முன்னேறி வருவதால், சொன்னது போலவே 2025-ல் முழுமையாக இயங்கக்கூடிய மனித உருவ Optimus ரோபோவை உருவாக்கி வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. 

இது மட்டும் வெற்றியடைந்தால், உலகில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். மனிதர்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளை ரோபோக்கள் தங்கள் வசமாக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. 

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT