க்யூ ஆர் கோட்களை கவனமாக கையாக சைபர் குற்றப்பிரிவு அறிவுரை.
சிறிய பெட்டிக்கடைகள் முதல் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் வரை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் இணைய பண பரிவர்த்தனை இயல்பான ஒன்றாக மாறியிருக்கிறது. யுபிஐ பணவர்த்தனை மற்றும் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் பண பரிவர்த்தனை என்று அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் க்யூ ஆர் கோடு முக்கியமான ஒன்றாக பயன்படுகிறது.
கல்லாப் பெட்டிகளுக்கு அருகில் க்யூ ஆர் கோட் ஸ்கேன் வைக்கப்பட்டிருக்கிறது. இணைய வழியில் பணம் செலுத்த ஏதுவாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் இயல்பான நடவடிக்கையாக மாறிப்போன க்யூ ஆர் கோட் முறையில் மோசடிகள் அதிகரித்து இருப்பதாக சைபர் குற்றப்பிரிவு தெரிவித்து இருக்கிறது.
தவறான க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதானால் நடைபெறும் பொருளாதார குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. க்யூ ஆர் கோட் ஸ்டிக்கர்கள் அல்லது போர்டுகளை பயன்படுத்தும் நபர்கள் அன்றாட ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் தங்கள் க்யூ ஆர் கோடுக்கு பதிலாக மோசடி க்யூ ஆர் கோட் ஸ்கேனை மாற்றி வைத்து விடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் மோசடி நபர்களுக்கு பணம் செல்கிறது. மேலும் மோசடி நபர்கள் க்யூ ஆர் கோட் மூலம் வங்கி கணக்கு விவரங்களை திருடி கூடுதல் பணங்களை மோசடி செய்கின்றனர்.
க்யூ ஆர் கோட் வழியாக ஆன்லைனில் பணம் செலுத்தும் நபர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது நபர்களுக்கு தான் பணம் சென்றடைகிறதா என்பதை ஸ்கேன் செய்தவுடன் வரும் பெயரை சரி பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.