இருக்கும் சூரியனே கண்ணைக் கூசும் வேளையில், பிரபஞ்சத்தில் சூரியனை விட ஒன்றல்ல இரண்டல்ல, 500 ட்ரில்லியன் (50,000 கோடி) மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஒளிரும் பொருளுக்கு (Quasar) குவாசர் J0529-4351 என்று பெயரிட்டுள்ளனர்.
மத்தியில் கருந்துளைகளைக் கொண்டு விண்மீன் திரள்கள் சூழ்ந்து ஒளிர்வது குவாசர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. மத்தியில் உள்ள கருந்துளைகளால் குவாசர் இயக்கப்டுகிறது. இந்த கருந்துளைகளில் வாயு மற்றும் தூசிகள் நெருங்கும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இதுவே அதன் ஒளிரும் தன்மைக்குக் காரணமாக அமைத்துள்ளது.
இந்த கருந்துளை நம்பமுடியாத அளவுக்கு நிறையினை பெற்றிருக்கும். குவாசர் J0529-4351 நிறை சூரியனின் நிறையை விட 1700 கோடி மடங்கு பெரியதாக இருக்கிறது.
சிலியில் உள்ள ஐரோப்பிய தெற்கு கண்காணிப்பகத்தில் VLT எனப்படும் மிகப்பெரிய தொலை நோக்கி மூலம் இதை கண்டு பிடித்துள்ளனர். இதுவரை எங்கும் கண்டிராத அளவுக்கு இது மிகவும் பிரகாசமான உள்ளதாகவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியிலிருந்து மிகவும் தொலைவாக இருக்கும் இந்த குவாசரிலிருந்து வரும் ஒளியானது பூமியை அடைய 12 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வந்துள்ளது. இதுவரை கண்டறிந்ததில் பிரபஞ்சத்திலேயே மிகப்பெரியது. 1980 ஆம் ஆண்டு முதல் வான ஆய்வுகளில் காணக்கூடியதாக இந்த குவாசர் இருந்தது. ஆனால், அதன் தீவிர பிரகாசம் காரணமாக ஆரம்பத்தில் நட்சத்திரம் என தவறாக வகைப்படுத்தப்பட்டது.
மிகப்பெரிய கருந்துளைகள் மற்றும் அவற்றின் விண்மீன்களின் தொகுப்புக்களின் கண்டுபிடிப்பு ஆரம்பகால பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்கான ஏதுவாக இருக்கும். பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி பல புதிய தகவல்களையும் அறியலாம்.
இந்த தகவலை வெளியிட்ட நேச்சர் வானியல் இதழின் முதன்மை ஆசிரியரான கிறிஸ்டியன் உல்ஃப், இவ்வளவு பிரம்மாண்டமான ஒளிரும் பொருளை இவ்வளவு காலமாக கண்டறியப்படாமல் இருந்தது குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.