Rabbit R1 
அறிவியல் / தொழில்நுட்பம்

Rabbit R1: ஸ்மார்ட் ஃபோன்களுக்கே சவால் விடும் சாதனம்! 

கண்மணி தங்கராஜ்

Rabbit R1 என்பது இன்றைய தொழிற்நுட்ப உலகில் புரட்சிகரமான செயல்திறன் நிறைந்த ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. அமெரிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தயாரிப்பான ‘R1’ எனும் சாதனம் தற்போது அதிகளவிலான மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. சுருக்கமாக சொன்னால் இது ஒரு  AI உதவியாளர். ஒரு சிறிய  தொலைபேசியைப் போலவே  இருந்தாலும்கூட இந்த சாதனம் அதனைவிட கொஞ்சம் தனித்தே நிற்கிறது. தற்போது இந்த கண்டுபிடிப்பானது தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தையும் விவாதத்தையும் தூண்டியுள்ளது.

Rabbit R1 என்றால் என்ன?

Rabbit R1 என்பது நம்முடைய அன்றாட செயல்களை எளிமையாக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பமாகும். இந்த செயற்கை நுண்ணறிவை நம்முடைய முக்கியப் பணிகளை எளிமையாக்கி கொள்வதற்காகவும், சந்தேகங்களுக்கு பதிலளிப்பதற்காகவும், திட்ட மிடலுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு  இது  பயனர்களுக்கான எளிமையான அணுகுமுறையையும், அனுபவத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

R1 பயன்பாடுகள் என்னென்ன?

இந்த புதுமையான சாதனமானது தனித்துவமான அம்சங்கள் மற்றும் திறன்களுக்காக மற்ற செயற்கை நுண்ணறிவைவிட தனித்து நிற்கிறது.  ‘Siri’ அல்லது ‘Google Assistant’ போன்ற தொழிற்நுட்பங்களை விடவும் முழுமையாக இது வேறுபட்டுள்ளது. கையடக்க நண்பனாக இயங்கும் இந்த Rabbit OS பயனர்களின் பயணத் திட்டங்களை ஆய்வு செய்தல், விமானத்திற்கான பயணச்சீட்டு முன்பதிவு அல்லது மளிகை, வணிகம் சார்ந்து  நிர்வகித்தல் போன்ற செயல்களில் பயனர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் தினசரி  செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு மிகச்சிறந்த கருவியாக தன்னை  நிலைநிறுத்திக்கொள்கிறது.

இது பயனர்களின் ‘வாய்ஸ் பிராசஸ்’ குறியீடுகளின் அடிப்படையில் தகவல்களை உள்வாங்கி பின்பு அதனை செயல்படுத்துகிறது. குறிப்பாக வெவ்வேறு செயலிகளின் வடிவில் செய்யக்கூடிய வேலைகளையெல்லாம்  இது  வாய்ஸ் நோட் மூலமாக எளிமையான முறையில் செய்துமுடிக்கிறது.

Rabbit R1 அமைப்பு:

  • பார்க்க மொபைல் போனை போலவே  அமைந்துள்ள இந்த Rabbit R1. மொபைல் போன்களின் வழக்கமான முறையைப் போலவேதான் இதுவும் ஸ்கிரீன் வழியே பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய திரையின் அளவு மிகவும் சிறியது. இதுவும் நமது பாக்கெட்களில் கச்சிதமாக அடங்கும் கருவிதான்.

  • R1-ல் பெரும்பாலான பணிகள் வாய்ஸ் கமாண்ட் மூலம் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காகவே பிரத்யேக (Squishy) பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இதில் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள, மெசேஜ் அனுப்ப உட்பட இன்னும் பல பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Rabbit OS-ல் இயங்கும் சாதனத்தின் திரையளவு 2.88 இன்ச்.

  • இதில் சிம் கார்டு பொருத்தி பயனர்கள் பயன்படுத்தலாம். 4ஜி நெட்வொர்க்கில் இந்த சாதனம் இயங்கும் வசதி கொடுள்ளது.

  • இதில் ஜெனரேட்டிவ் AI அம்சம் இடம்பெற்றுள்ளது. அதன்மூலமாக பல்வேறு தகவல்களை பயனர்கள் பெற முடியும்.

  • இதில் இடம்பெற்றுள்ள கேமரா 360 டிகிரியில் படம் பிடிக்கும்.

  • 4ஜிபி மெமரி மற்றும்  128 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இத்தகைய சிறப்பு நிறைந்த இந்த தொழிற்நுட்ப கருவியை இதுவரை தலா 10,000 வீதம் 5 பேட்ச் ‘ஆர்1’ சாதனம் முன்பதிவு ஆகியுள்ளது என்றும் தற்போது ஆறாவது பேட்ச் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான வரவேற்பு இவ்வளவு ஆரவாரமான முறையில் இருக்கும் பட்சத்தில் இந்த Rabbit R1 தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி சாதித்து காட்டுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT