Fighter Jets 
அறிவியல் / தொழில்நுட்பம்

உலகளவில் பயன்பாட்டில் உள்ள சில அதிநவீன போர் விமானங்கள்!

A.N.ராகுல்

ஒலியை (Sound) கிழித்து செல்லக்கூடிய சில நவீன ரக போர் விமானங்கள் உலகளவில் பல நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. மணிக்கு 4,200km/h மேல் செல்லக்கூடிய இந்த விமானங்கள் எதற்கு பயன்படுகின்றன மற்றும் அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

உலகின் தலைசிறந்த போர் விமானங்கள்:

உலகின் இருக்கும் தலைசிறந்த போர் விமானங்கள் நவீன கால பொறியியலின் அற்புதங்களாகும், அவை மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறந்த செயல்திறனுடன் வானத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் F-22 Raptor விமானம் முன்னணியில் உள்ளது. அதன் தனித்துவமான திறன்கள் மற்றும் மின்னல் வேகத்தில் காற்றை கிழிக்க கூடிய வேகம் அதன் தனிச்சிறப்பு. F-35 Lightning II ஒரு பல்துறை போர் விமானம், வான்வழி சாகசம் மற்றும் தரையிறக்கத்திலும் தாழ்வாக பறக்கும் திறன் ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்குகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த Sukhoi Su-57 Felon பல நவீனங்களை உள்ளடக்கிய, அசாத்திய கைக்கடக்கமான திறன் (Maneuverability) மற்றும் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் (Advanced Avionics) ஆகியவை அதன் தனி சிறப்பு. பின் Eurofighter Typhoon மற்றும் Dassault Rafale ஆகியவையும் அதிக செயல்திறன் மற்றும் அதி வேகத்துக்கு பெயர் பெற்றவையாக தரவரிசையில் சிறந்து விளங்குகின்றன.

போர் விமானங்களின் பயன்பாடுகள்:

போர் விமானங்கள் முதன்மையாக வான் பாதுகாப்பு மற்றும் போருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை ஓர் நாட்டின் வான் பாதுகாப்பை உறுதி செய்வதே அதன் அன்றாட பணியாகும். எதிரி விமானங்களிலிருந்து வான்வெளியை பாதுகாப்பதிலும் மற்ற தரைவழி இராணுவச் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூடுதலாக, மேல குறிப்பிட்ட இந்த நவீன போர் விமானங்கள் காற்றிலும், தரைவழியிலும் தேவைப்படும் நேரங்களில் கட்சிதமாக செல்லப்படும் வகையில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன, குறிப்பாக துல்லியமான வழிகாட்டியுடன் (Navigation and Sensor) வெடிமருந்துகளை வைத்து தரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை இவை. பின் உளவு பார்க்கவும், மற்றும் தரை பகுதியில் செயல்படும் ராணுவ சக்திகளுக்கும் நேர்த்தியான பாதுகாப்பை வழங்குகின்றன. இப்படி, இந்த விமானங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் ஒரு நாட்டின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த உதவுகின்றன.

முன்னணி போர் விமான உற்பத்தியாளர்கள்:

போர் விமானங்களின் முன்னணி உற்பத்தியாளர்கள் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையிலும் உலகளாவிய ஜாம்பவான்களாக இருக்கின்றன. இதில் லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) முன்னணியில் உள்ளது. இவர்கள் F-22 Raptor மற்றும் F-35 Lightning II தயாரிக்கின்றன. போயிங் (Boeing) மற்றொரு முக்கிய நிறுவனமாகும், அதன் F/A-18 சூப்பர் ஹார்னெட்(Super Hornet) மற்றும் வரவிருக்கும் F-15EX ஆகியவை தனி சிறப்புகள் நிறைந்தவை. ஏர்பஸ் (Airbus) (அதன் துணை நிறுவனமான Airbus Defence and Space) மூலம் Eurofighter Typhoon விமானத்தை தயாரிக்கிறார்கள். பின் பிரான்சின் (France) டசால்ட் ஏவியேஷன் (Dassault Aviation) Rafaleக்கு பிரபலமானது. ரஷ்யாவைச் சேர்ந்த Sukoi போர் விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ளது . இப்படி இந்த நிறுவனங்கள் உலகளவில் ராணுவத்திற்கு தேவையான விமான தொழில்நுட்பத்தில் தொடர்ந்து புதுமைகளை புகுத்தி முன்னணியில் இருக்கின்றன.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT