Anti- sleep alarm glass 
அறிவியல் / தொழில்நுட்பம்

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

ராஜமருதவேல்

பெரும்பாலான சாலை விபத்துகள் ஓட்டுனர்களின் கவனக் குறைவால் அல்லது அவர்களுக்கு தூக்கம் வரும்போது தான் நிகழ்கின்றன. பெரும்பாலான விபத்துகள் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை தான் நடைபெறும். இந்த நேரத்தில் கண் விழித்து ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டினாலும் அவர்களை அறியாமல் ஏதேனும் ஒரு நொடியில் தூக்கம் கண்ணை சொக்கி விடும். அந்த ஒரு நொடியில் தான் ஏராளமான விபத்துகள் நடந்துள்ளன. இது போன்ற விபத்துக்களைத் தடுக்க ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒரு கண்ணாடியை உருவாக்கியுள்ளார்.

ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் உள்ள புத்தராஜா அரசு உயர்நிலைப் பள்ளியில், தன்மய் தாஸ் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் உருவாக்கிய கண்ணாடி தான் அது. வாகன ஓட்டிகளுக்கு தூக்கம் வருவதை தடுக்கும் இந்தக் கண்ணாடியை தன்மய் 400 ரூபாய் செலவில் உருவாக்கியுள்ளார். ஒரு சென்சார், பஸர் மற்றும் பேட்டரி மூலம் கண்ணாடிகளை இணைத்துள்ளார்.

பின்னிரவு நேரங்களில் தன் சுயக்கட்டுப்பாட்டையும் தாண்டி தூங்கி விடும் ஓட்டுனர்களை எழுப்பி விபத்துக்களை தடுக்கும் வண்ணம் இந்த திட்டத்தை மாணவர் உருவாக்கியுள்ளார். 

தன்மய், ஓட்டுநர்கள் மற்றும் படிக்கும் நேரத்தில் மாணவர்கள் தூக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க உதவும்படி இந்த கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார்.

தன்மய் உள்ளூர் சந்தையில் இருந்து ஒரு பஸர், ஒரு பேட்டரி மற்றும் சென்சார்களை வாங்கி, இந்த கண்ணாடியை உருவாக்கியுள்ளார். சிறு வயதில் இருந்தே அவருக்கு கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் இருந்துள்ளது. தன்மயிக்கு இரவு நேர விபத்துக்கள், தூக்கத்தில் இருக்கும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் மீது கவலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர்  விளக்கமளிக்கையில், “ஓட்டுனர்கள் தற்செயலாக தூங்கும்போது பல விபத்துகள் நடக்கின்றன. மக்கள் விழிப்புடன் இருக்க உதவக்கூடிய ஒன்றை மலிவு விலையில் செய்ய விரும்பினேன்."

இந்த தூக்க எதிர்ப்பு கண்ணாடிகள், பயனரின் கண்கள் மூடப்படும்போது, ஒளி மற்றும் எச்சரிக்கை ஒலியை வெளியிடும். இவ்வாறு, உணர்திறன் மூலம் செயல்பட்டு உடனடியாக அணிந்திருப்பவரை எச்சரிக்கை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும் போது அல்லது படிக்கும் போது கண்களை மூடிக்கொண்டால் (காது கேளாத நபர்கள் கூட) அவர்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடிய அதிர்வு மோட்டாரும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

"இந்த 'ஆன்டி ஸ்லீப் அலாரம் கண்ணாடிகள்', ஒருவர் கண்களை மூடிக்கொண்டாலோ அல்லது அதை அணிந்துகொண்டு தூங்கினாலோ, கண்ணாடிகள் ஒளியை ஒளிரச் செய்து அலாரம் அடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனரின் தூக்கம் கெடும். இந்த கண்ணாடிகள் விபத்துகளைத் தடுப்பதிலும், மக்கள் விழிப்புடன் இருக்க உதவுவதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த யோசனையை என்னால் மேலும் சிறப்பாக்க முடிந்தால், அது அதிகமான மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார் தன்மய்.

இந்த திட்டம் மத்திய அரசின் தேசிய கண்டுபிடிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. சமீபத்தில் ஒரு கண்காட்சியில் அவரது படைப்பு காட்சிப்படுத்தப்பட்டது. பரவலான பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

குழந்தைகள் படிச்சதை மறக்காம இருக்க பாலோ பண்ண வேண்டிய 4 விஷயங்கள்!

SCROLL FOR NEXT