The tragic end of Nikola Tesla! 
அறிவியல் / தொழில்நுட்பம்

நிக்கோலா டெஸ்லாவின் சோகமான முடிவு! 

கிரி கணபதி

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ‘நிக்கோலா டெஸ்லா’ மின்சாரத் தந்தை என அழைக்கப்படுபவர். இவர் அறிவியல் உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். அவரது கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன உலகை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தன. ஆனால், இந்த மிகப்பெரிய விஞ்ஞானியின் இறுதி காலம் எப்படி இருந்தது? இது பலருக்கு சந்தேகமாகவே இருக்கிறது. இந்தப் பதிவில் சில தகவல்களை வைத்து அவருடைய இறுதி காலம் எப்படி இருந்திருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம். 

செல்ஃபியாவில் பிறந்த டெஸ்லா சிறுவயதிலேயே அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர், அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து தாமஸ் எடிசன் போன்ற சிறந்த கண்டுபிடிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். ஆனால், இருவரின் வித்தியாசமான வேலை முறைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, அவர்கள் பிரிந்து சென்றனர். டெஸ்லா தனது வாழ்நாளில் ஏசி மின்சாரம், மோட்டார்கள், ரேடியோ, எக்ஸ்-ரே போன்ற பல விஷயங்களை கண்டுபிடித்தார்.

தனிமை: தனது இறுதி காலத்தில் டெஸ்லா மிகவும் தனிமையாகவே வாழ்ந்தார். அவர் கண்டுபிடித்த பல கருவிகள் மற்றும் கோட்பாடுகள் அப்போது முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இதனால், அவர் பலரால் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டார். அவரது கண்டுபிடிப்புகளின் மீதான உரிமைகளை இழந்ததும், நிதி நெருக்கடியில் சிக்கியதும் அவரது மனதை பாதித்தன. இதன் காரணமாக அவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை ஒரு தங்கும் விடுதியில் கழித்தார். 

அவர் தனது நேரத்தை புத்தகங்கள் படிப்பதிலும், புறாக்களுடன் விளையாடுவதிலும் கழித்தார். புறாக்களின் மீது டெஸ்லாவுக்கு மிகுந்த பாசம் இருந்தது. அவர் அவற்றை தனது குழந்தைகள் என்று அழைப்பார். 

மர்மமான மரணம்: 1943 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி, 86 வயதில் டெஸ்லா மரணமடைந்தார். அவரது மரணம் மிகவும் மர்மமானது. அவர் தூக்கத்தில் இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர். மற்றவர்கள் அவர் கொல்லப்பட்டார் என்று கூறுகின்றனர். ஆனால், அவரது மரணத்திற்கு உண்மையான காரணம் என்னவென்று இன்றுவரை தெரியவில்லை. 

டெஸ்லாவின் மரணத்திற்குப் பின் அவரது கண்டுபிடிப்புகள் மீதான ஆர்வம் அதிகரித்தது. அவரது ஆய்வுக்கூடத்தில் இருந்த பல பொருட்கள் அவரது உறவினர்களாலு,ம் அமெரிக்க அரசாங்கத்தாலும் கைப்பற்றப்பட்டன. இதனால், அவரது கண்டுபிடிப்புகள் மர்மமாகவே இருந்து வருகின்றன. டெஸ்லா கண்டுபிடித்த பல விஷயங்களை, மறு உருவாக்கம் செய்து அதற்கான காப்புரிமையை மற்றவர்கள் பெற்றுக்கொண்டனர். இறுதிவரை அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. 

நிக்கோலா டெஸ்லா ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி. இன்றைய நவீன உலகில் நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் அவரது கண்டுபிடிப்பின் காரணமாகவே உருவாகின என்பதை நாம் மறுக்க முடியாது. இப்படிப்பட்ட தலைசிறந்த விஞ்ஞானியின் இறுதி காலம் மிகவும் மோசமானதாகவே இருந்தது. 

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

SCROLL FOR NEXT