75 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த நியண்டர்தல் பெண் எப்படி இருந்திருப்பார் என்ற ஆராய்ச்சி பல காலமாக நடந்து வந்தது. இதனையடுத்து, தற்போது அந்த பெண்ணை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.
லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளனர். அதாவது 75 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த நியண்டர்தல் பெண்ணை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த ஆராய்ச்சியின் முதல் படியாக, அந்த நியண்டர்தல் பெண்ணின் எலும்பைத் தோண்டி எடுத்துள்ளார்கள். இந்த எலும்புகள், ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள ஷனிதர் குகையில் கண்டெடுக்கப்பட்டன. கடந்த 2015ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஈராக்கில் போர் செய்யும்போது இந்த குகையில், உடம்பு, முதுகெலும்பு, தோள்பட்டை, கைகள் போன்ற எலும்புகளை எடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 10 நியண்டர்தல் ஆண்கள் மற்றும் பெண்ணிகளின் எலும்புகளை அந்த குகையிலிருந்து எடுத்துள்ளனர். அந்த எலும்பு மிகவும் மென்மையாகவும், வளைவு நெளிவுகள் பெரிய அளவில் இல்லாமல், தட்டையாக இருந்துள்ளது. ஆகையால், முதலில் அந்த எலும்புத் துண்டுகளை திடமாக மாற்றி, அதன்பின்னர் அதனை ஒன்று சேர்த்துள்ளனர்.
இந்த எலும்புகளை வைத்துப் பார்க்கும்போது, அந்தப் பெண் இறந்தப்பின்னர் அவருடைய மண்டை ஓட்டை 200 துண்டுகளாக, சுக்கு நூறாக உடைத்திருக்கிறார்கள் அல்லது உடையப்பட்டிருக்கிறது. எலும்புகளை ஒன்றாக சேர்த்த அவர்கள், 3D ப்ரின்டிங் நுட்பத்தின்மூலம் முழு முகத்தையும் கொண்டு வந்துள்ளனர். அந்த நுட்பத்தின் மூலம் பழுப்பு நிறக் கூந்தல், முக சருமம், கழுத்துத் தோல்கள் என அனைத்தையும் உருவாக்கி அந்த நியண்டர்தல் பெண்ணை மீண்டும் கொண்டுவந்துள்ளனர்.
நியண்டர்தல் பெண்ணின் முகத்திற்கும், தற்போது நம்முடைய முகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதிகமான புருவ வளைவு, ஒடுங்கிய கண்ணங்கள் போன்ற நிறைய வேறுபாடுகள் இருந்தாலும், நம்முடைய DNA வும் அவர்களுடைய DNA வும் சற்று ஒத்துப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
குரங்கிலிருந்து மனிதர்கள் வந்தார்கள் என்பதை நாம் சிறு வயதிலிருந்து படித்து வருகிறோம். சுமார் 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள் போலவே நியண்டர்தல் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் ஏறத்தாழ 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முழுவதுமாக அழிந்துவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
அப்படியிருக்க, பல நூற்றாண்டுகளுக்கு, பல லட்ச வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை தற்போது நாம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களின் திறமையாகக் கருதுவதா? அல்லது நம்முடைய வரமாகக் கருதுவதா?