நீருக்கு அடியில் வாழும் மனிதர்களை கற்பனை செய்து பார்க்கவே விசித்திரமாக உள்ளது. உலகமானது மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், மனிதர்கள் நீரில் வாழ்வதற்கு ஏற்றவாறு பரிணாம வளர்ச்சி அடைந்தால் நன்றாக இருக்குமே என நாம் நினைக்கத் தோன்றுகிறது. ஒருவேளை மனிதர்கள் நீருக்கு அடியில் வாழும்படி பரிணாம வளர்ச்சி அடைந்தால் என்ன ஆகும்? வாருங்கள் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் மனிதர்கள் நீருக்கு அடியில் உயிர் வாழ்வதற்கு ஏதுவாக உடல் மாற்றங்கள் ஏற்படும். நீருக்கு அடியில் நீந்திச் செல்லவும், சுவாசிக்கவும் உடல் தன்னை உருமாற்றிக் கொள்ளும். மீன்களைப் போல செதில்கள் மற்றும் நீரிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுப்பதற்கான நுரையீரல் மற்றும் அதிக அழுத்தத்தைத் தாங்கும் வலுவான எலும்புகள் ஆகியவை உடலில் மாற்றம் பெறலாம். குறிப்பாக நீருக்கு அடியில் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ஏதுவான பார்வை மற்றும் செவித்திறன் மேம்படும்.
அதேபோல மனிதர்களின் உணவு முறை முற்றிலுமாக மாறிவிடும். நிலப்பரப்பில் பல்வேறு வகையான விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றை உட்கொண்ட மனிதன், நீருக்கு அடியில் முற்றிலுமாக கடல் தாவரங்கள், பாசிகள் மற்றும் பல வகையான கடல் உணவுகளை உட்கொள்வதற்கான மாற்றத்தைப் பெறுவான். காலப்போக்கில் நீருக்கு அடியில் உள்ள உணவுகளை உட்கொண்டு அதிலிருந்து ஊட்டச்சத்துக்களை திறம்பட பிரித்தெடுக்கும் செரிமான அமைப்புகள் கிடைக்கும்.
நீருக்கு அடியில் வாழும்போது நம்மால் சாதாரணமாக பேச முடியாது. எனவே புதிய தகவல் தொடர்பு மற்றும் மொழி கட்டாயம் தேவைப்படும். நீருக்கு அடியில் திறம்பட தகவல்களைப் பகிரக்கூடிய உடல் அசைவுகள், ஒலி சமிங்கைகள் போன்றவற்றின் மூலமாக மனிதர்கள் தொடர்பு கொள்ளலாம். இதன் மூலமாக மனிதர்களின் மொழி முற்றிலுமாக மாறிவிடும்.
மனிதர்கள் நீருக்கு அடியில் வாழும் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு அவர்களின் சமூகக் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கலாம். நீருக்கு அடியில் செல்லக்கூடிய வாகனங்கள் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்குதல், அவற்றுக்கான கட்டுமானம் என எல்லா தொழில்நுட்பமும் முற்றிலும் புதுமையாக முன்னேறும்.
மனிதர்கள் நீருக்கு அடியில் வாழ்வதைப் பற்றி சிந்திக்கும்போது அது மிகவும் கடினமாக இருக்குமே என நமக்கு தோன்றினாலும், ஒருவேளை எதிர்காலத்தில் பூமி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டால், மனிதர்களின் இத்தகைய பரிணாம வளர்ச்சி கட்டாயமாகும். மேலும் நீருக்கு அடியில் வாழ்வதற்கு பல சவால்களை சந்திக்கும் திறன்கள், அறிவு மற்றும் தொழில்நுட்பங்களை மனிதன் உருவாக்க வேண்டும். அல்லது பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனிதர்களுக்கு இத்தகைய தன்மை இயற்கையாகவே கிடைக்கலாம். ஆனால் அதற்கு சில மில்லியன் ஆண்டு காலம் ஆகலாம்.