NCAP rating 
அறிவியல் / தொழில்நுட்பம்

NCAP ரேட்டிங் என்றால் என்ன? அதில் என்ன பயன் உள்ளது?

A.N.ராகுல்

இன்றைய காலகட்டத்தில் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை இந்த உலகிற்கு பிரபலப்படுத்த NCAP rating (New Car Assessment Program)இல் தங்கள் தயாரிப்புகளைக் களமிறக்குகிறார்கள். இதன்மூலம் எந்தக் கார் பாதுகாப்பானது, சொகுசானது போன்ற விஷயங்களில் மக்களுக்குத் தெளிவு கிடைக்கிறது. உலகின் பல நாடுகளிலும், அந்தந்த நாட்டின் சூழ்நிலைக்கேற்ப, வாகன பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

குளோபல் NCAP (புதிய கார் மதிப்பீட்டு திட்டம்):

Global NCAP என்பது உலகத்தில் உள்ள அனைவராலும் முதன்மையாக பார்க்கப்படும் கார் மதிப்பீடு முறை. இம்முறையானது வாகன விபத்து சோதனை மற்றும் அதன் தர அறிக்கைகளை உலகத்தில் உள்ள அனைவருக்கும் உணர்த்துகிறது. அவர்கள் முதன்மையாக ஃப்ரன்ட் ஆஃப்செட்(Front Offset) விபத்து சோதனைகள் மூலம் கார்களை மதிப்பிடுகின்றனர்.

இந்தச் சோதனைகளில், கார் 64 km/h (40 mph) வேகத்தில் இயக்கப்படுகிறது. 40% காரை சிதைக்கக்கூடிய தடைகளை உருவாக்கி, அதில் காரை மோதவிடுவார்கள். ஒரே எடையுள்ள இரண்டு கார்களுக்கு இடையே நடக்கும் ஒரு விபத்து போன்ற சூழ்நிலையை உருவாக்குவார்கள். ஒரு கார் 5-நட்சத்திர மதிப்பெண் பெற்றால், அந்த கார் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு முழுமையான பாதுகாப்பிற்கு ஏற்ற கார் என்று சான்று அளிக்கப்படும். இப்படி மதிப்பெண்கள் 4,3,2,1 என்று அந்தந்த கார்களுக்கு அதன் தரத்திற்கேற்ப வழங்கப்படுகிறது.

பாரத் என்சிஏபி (BNCAP):

இந்தியாவில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் (MoRTH) தொடங்கப்பட்டது. Global NCAP (GNCAP) இல் பின்பற்றப்படும் நெறிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

குறிப்பாக,

  • குழந்தைகள் பாதுகாப்பு மதிப்பெண் நடைமுறைகள்.

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) தேவை. (கண்டிப்பாக 3 நட்சத்திரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்ற ஸ்டெபிலிடி கார்களில் இருப்பதை உறுதி செய்வது ).

  • பக்க துருவ தாக்க சோதனை(Side pole impact test) நடத்தப்படுகிறது.

  • Adult Safety (AOP)வயதுவந்தோர் பாதுகாப்பில் BNCAP அதிகபட்சமாக 32 புள்ளிகளை அனுமதிக்கிறது (ஆனால் GNCAP இல் 34 புள்ளிகள் வரை கொடுக்கிறார்கள்)

யூரோ NCAP( Euro NCAP)

இந்தியாவில் குளோபல் NCAP போல் யூரோ NCAP இன் மதிப்பெண்கள் கட்டாயமாக பார்க்கப்படுவதில்லை. Euro NCAPலும் வயது வந்தோருக்கான பாதுகாப்பு, குழந்தைகளின் பாதுகாப்பு, பாதசாரி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உதவி அம்சங்கள்(safety assist feature) உட்பட பல்வேறு வகைகளில் வாகனங்களை மதிப்பிடுகிறார்கள். Euro NCAP இல் ஐரோப்பிய நாடுகளின் சூழலுக்கேற்ப சோதனைகளை மேற்கொள்கிறார்கள்.

ANCAP (ஆஸ்திரேலிய புதிய கார் மதிப்பீட்டு திட்டம்):

ANCAP ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள கார்களை அதன் சூழ்நிலைகேற்ப மதிப்பீடு செய்கிறார்கள். அவர்களின் சோதனையில் முன்பக்க ஆஃப்செட் (Front Offset), பக்க தாக்கம் (Side impact) மற்றும் துருவ சோதனைகள் (Pole Test), அத்துடன் பாதசாரி பாதுகாப்பு மதிப்பீடுகள்(pedestrian protection assessments) ஆகியவை அடங்கும்.

லத்தீன் NCAP:

லத்தீன் NCAP லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் சந்தைகளில் கவனம் செலுத்துகிறது. அவர்களின் சோதனைகளில் முன்பக்கம் (Front) , பக்கவாட்டு (Side), துருவ தாக்கங்கள் (Pole Impacts) மற்றும் பாதசாரி பாதுகாப்பு (Pedestrian Safety) ஆகியவை சோதித்துப் பார்க்கப்படுகின்றன.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT