ஸ்பெஷல்

உக்ரைன் போர்; கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக உக்ரைன் அறிவிப்பு!

கல்கி

உக்ரைனின் தெற்கு பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போர் 8-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது உக்ரைனில் பல்வேறு நகரங்கள் போரில் சிதைக்கப்பட்டன.  இதனிடையே , போரை முடிவுக்குக் கொண்டு வர, பெலாரஸில் நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில்  . அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது .

ஆனால் உக்ரைன் தரப்பில் யாரும் வராததால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது .

இந்நிலையில் உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரமாகப் போராடியது. அதையடுத்து அந்நகரின் பெரும்பகுதியை பிடித்து விட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இத்தகவலை மறுத்த கெர்சன் மேயர், கெர்சன் நகரம் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக நேற்று தெரிவித்தார் .

இந்த நிலையில் , கெர்சன் நகர் முழுவதுமாக தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

அருகி வரும் அரியக் கலை தெருக்கூத்து!

லென்டில்ஸ் அன்ட் லெக்யூம்ஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

இயற்கையை ரசிக்க என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இணையத்தில் உள்ள AI Web Browsers என்னென்ன தெரியுமா? அவற்றின் பலன்களைப் பார்ப்போமா?

மின்னணு வாக்குப்பதிவு vs வாக்குச்சீட்டு: தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

SCROLL FOR NEXT