ஸ்பெஷல்

1 கிலோ தக்காளி ரூ.150: தமிழகத்தில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

கல்கி

சென்னையில் இன்று தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால், மாநிலம் மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு சந்தையில் காய்கறி வரத்து குறைந்துளது. எனவே காய்கறீ விலையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று 1 கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ 150-க்கு விற்கப்படுகிறது. மேலும் சில காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி ரூ.110

வெங்காயம் ரூ.40
அவரைக்காய் ரூ.50
பீன்ஸ் – 50
பீட்ரூட் ரூ.40
வெண்டைக்காய் ரூ.100
நூக்கல் ரூ.50
உருளைக் கிழங்கு ரூ.30
முள்ளங்கி ரூ.40
புடலங்காய் ரூ.60

சுரைக்காய் ரூ.60
பாகற்காய் ரூ.60
கத்தரிக்காய் ரூ.60
குடை மிளகாய் ரூ.80
கேரட் ரூ.40
காலிபிளவர் ரூ.40


சவ்சவ் ரூ.12
தேங்காய் ரூ.32
வெள்ளரிக்காய் ரூ.15
முருங்கைக்காய் ரூ.90
இஞ்சி ரூ.65
பச்சை மிளகாய் ரூ.30
கோவைக்காய் ரூ.55.

இவ்வாறு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோடைக்காலத்திற்கு ஏற்ற பெண்களுக்கான ஹேர்கட் என்னென்ன தெரிஞ்சிக்கலாம் வாங்க!

ஊட்டியையே தூக்கி சாப்பிடும் குளிர்ந்த காற்று வீசும் ராமக்கல்மேடு போவோமா வாருங்கள்!

மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

காற்றால் இயங்கும் லிஃப்ட்டுகள் அழகுக்கு அழகு, ஆற்றலுக்கு ஆற்றல்!

சாப்பிடுவதற்கும் சில விதிமுறைகள் உண்டு தெரியுமா?

SCROLL FOR NEXT