ஸ்பெஷல்

பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க கடைசி தேதி மார்ச் 31: மத்திய அரசு அறிவிப்பு!

கல்கி

நாட்டில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் – 31 என்றும் அதற்குள் இணைக்காவிட்டால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன.

வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன

இந்நிலையில் ஆதார் கார்டுடன் தங்களது  பான் கார்டையும் இணைக்க வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கால அவகாசத்தை தொடர்ந்து நீட்டித்து வருகிறது.

இந்நிலையில் இம்மாதம் (மார்ச் 31)  வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறுகதை - உண்மைகள் உறங்கட்டும்!

இந்த 10 விஷயங்களை ஒருபோதும் பிறரிடம் எதிர்பார்க்காதீர்கள்… மீறினால்? 

அதிசய எண் 108 பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க!

ஆன்மிகக் கதை - கங்கையின் மகிமை!

இந்த சம்மர் சீசனில் ஜில்லுனு ஜூஸ் குடிக்கலாமா?

SCROLL FOR NEXT