ஸ்பெஷல்

Breaking: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்.. முன்னிலையில் திமுக!

கல்கி

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. மேலும் 5 வார்டுகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு எண்ணிக்கை இன்று நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தலில் சில இடங்களில் வேட்பாளர்கள் சிலர் போட்டியின்றி முன்னதாகவே தேர்வான நிலையில்,மீதமுள்ள இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில்,இன்று காலை 8.00 மணிக்கு 268 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி,முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,அந்தந்த மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கட்சிகள்,வேட்பாளரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி,தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, மற்றும் 292 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகள் தர்பூசணி பழம் சாப்பிடலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

குறைவான வருமானம்; நிறைவான வாழ்க்கை!

30 வயதிற்கு மேற்பட்ட பெண்ணா நீங்கள்? இதோ உங்களுக்கான சருமப் பராமரிப்பு குறிப்புகள்! 

பாராமதி தொகுதியில் மோதும் பவார் குடும்பத்து மகளும், மருமகளும்!

முருங்கைக்காய் மற்றும் முருங்கைப்பூ ரெசிபிஸ்!

SCROLL FOR NEXT