ஸ்பெஷல்

அருணாச்சல பிரதேசத்துக்கு ஜாங்னான் என்று புதுப் பெயர்: சீனா அறிவிப்புக்கு இந்தியா கண்டனம்!

கல்கி

அருணாச்சல பிரதேசத்துக்கு சீனா அடாவடியாக ஜாங்னான் என்று புதுப் பெயரைச் சூட்டியதுடன் அம்மாநிலத்தின் பல பகுதிகளின் பெயர்களை மாற்றியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதை தெற்கு திபெத் என்று சீனா தெரிவித்து அப்பகுதியை இந்தியா ஆக்கிரமித்துள்ளதாக அடாவடியாக அறிவித்துள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசத்துக்கு சீனா ஜாங்னான் புதுப்பெயர் சூட்டியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. மேலும் அம்மாநிலத்திலுள்ள 15 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதை சீனா எக்காலத்திலும் மாற்ற முடியாது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செவித்திறன் பாதிப்புகளும் நிவாரணமும்!

உங்க ஸ்மார்ட்போன் மெதுவா சார்ஜ் ஏறுதா? அதற்கான தீர்வு இதோ! 

மரங்கள் சூழ வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை அறிவோமா?

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தந்திரங்கள்! 

ஜப்பானியர்கள் பின்பற்றும் வாழ்க்கைக்குத் தேவையான 6 யுக்திகள்!

SCROLL FOR NEXT