ஸ்பெஷல்

#BREAKING: அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் நியமனம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!

கல்கி

அதிமுக கட்சி விதிகளின் படி, புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆனால் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டார்கள்.

இது அதிமுகவின் விதிகளுக்கு முரணானது என்று அதிமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டதாவது:

ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து நீதிமன்றம் தலைய்டிட முடியாது. அக்கட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள், நிர்வாகிகள் குறித்து உள்ளே நுழைந்து ஆராய முடியாது. அவர்களின் பிரதிநிதிகள் அளிக்கும் பிராமண பத்திரத்தை ஏற்றுக்கொண்டு அனுமதி அளிப்பதோ மறுப்பதோ தேர்தல் ஆணையத்தின் முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றத்தில் தவறில்லை. அந்தவகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமனம் செல்லுபடியாகும்.

-இவ்வாறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை உங்களுக்கு இருக்கா? அதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய 10 பண்புகள் என்ன?

மகிழ்ச்சியை வரவழைக்கும் மந்திரம் இதுதான்!

வீட்டில் மகிழ்ச்சி பொங்க வாஸ்து சாஸ்திரம் காட்டும் ஓவியங்கள்!

நாக சைதன்யாவின் ‘தண்டேல்’ படத்தை வாங்கிய நெட் ஃப்லிக்ஸ்!

உலகிலே மிக உயரமான மரம் எது? எங்கு உள்ளது? தெரிந்துகொள்வோமா?

SCROLL FOR NEXT