ஸ்பெஷல்

கொரோனா தடுப்பூசி போலி சான்றிதழ் வழங்கினால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை!

கல்கி

கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் அவர்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட துணை இயக்குநர்களுக்கும் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது:

கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஒருசிலர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக முறைகேடாக சான்றிதழ்களை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படிப்பட்ட முறைகேடுகளுக்கு களப்பணியாளர்கள் துணைபோகக் கூடாது. பொதுமக்கள் முறையாக தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகே அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும். அப்படி தடுப்பூசி செலுத்தாமலே போலி சான்றிதழ் வழங்கும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி எங்கு காட்சி தருகிறார் தெரியுமா?

ஹைலூரோனிக் அமிலம் என்றால் என்னவென்று தெரியுமா?

செவித்திறன் பாதிப்புகளும் நிவாரணமும்!

உங்க ஸ்மார்ட்போன் மெதுவா சார்ஜ் ஏறுதா? அதற்கான தீர்வு இதோ! 

மரங்கள் சூழ வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை அறிவோமா?

SCROLL FOR NEXT