ஸ்பெஷல்

தீபத் திருநாள்: திருவண்ணாமலை ஆலயத்தில் ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்!

கல்கி

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவம்பர் 7-ம் தேதிமுதல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளீயிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் தீபத் திருநாளை முன்னிட்டு, பக்தர்கள் அந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகிறது. அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் பாஸ் பெற வேண்டும். அதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். நாளை முதல் (நவம்பர் 6) ஆன்லைனில் முன்பதிவு தொடங்கப் படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 10-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in என்ற இணைய தளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம் ஆகியவற்றை தேர்வுசெய்து பாஸ் பெறலாம்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனையே சீண்டிப்பார்த்த நம் விஞ்ஞானிகள்!

கோபப்படும் கணவரை மிஸ்டர் கூலாக மாற்றும் தந்திரம்!

ஒருவரின் தொழில் வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் எவ்வாறு உதவுகின்றன?

யார் இந்த ஆரோக்கிய ராஜீவ்? தடகளத்தில் இவரின் சாதனைகள் என்னென்ன?

அதிகமாக மீன்பிடிப்பதால் இவ்வளவு பாதிப்புகளா? 

SCROLL FOR NEXT