National Law Day 
ஸ்பெஷல்

தேசிய சட்ட தினம் எப்படி வந்தது தெரியுமா?

நவம்பர் 26, தேசிய சட்ட தினம்

கோவீ.ராஜேந்திரன்

ந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட நவம்பர் 26ம் தேதியே தேசிய சட்ட தினமாக 2015ம் ஆண்டு முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி தேசிய சட்ட தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சாசனம் 1947ம் ஆண்டு நவம்பர் 26ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஜனவரி 26ல் அமலுக்கு வந்தது. உலகிலேயே ‘சமூக நீதி’ என்ற வார்த்தை இடம் பிடித்த அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசியல் சட்டம்தான். உலகிலேயே நீண்ட எழுத்துப்பூர்வமான அரசியல் சட்டமும் இந்தியாவுடையதுதான்.

1979ம் ஆண்டு முதன்முதலாக தேசிய சட்ட தினம் கொண்டாட முயற்சிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் பார் கவுன்சில் அசோசியேஷனின் முயற்சியில் அது ஒரு மசோதாவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ம் தேதியை தேசிய சட்ட தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 2015ம் ஆண்டில் இருந்து இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் 23 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்தும் சட்டம் சார்ந்த படிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படிக் கிடையாது. உலகின் புகழ் பெற்ற சட்ட பள்ளிகளை கொண்ட யேல் யுனிவர்சிட்டி, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி, கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி போன்றவற்றில் கூட ஒரு பகுதியாக மற்ற பல்கலைக்கழகங்களை போல சட்டத்துறை சார்ந்தவைகளைப் பார்க்கின்றன.

உலகிலேயே அதிகளவு சட்டம் படித்தவர்கள் இருப்பது இந்தியாவில்தான். கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் உள்ளனர். இந்தியாவின் டாப் 100 சட்ட கம்பெனிகள் வருடத்திற்கு சராசரியாக 600 மில்லியன் டாலர்களை சட்டம் சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்துகின்றன. இந்தியாவிலுள்ள சட்ட பல்கலைக்கழகங்கள் பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அதனை இந்திய சட்டத்துறை இலாகா கண்காணிக்கிறது. 1988ம் ஆண்டு முதன்முதலாக சட்ட பல்கலைக்கழகம் பெங்களூருவில் தொடங்கப்பட்டது. உலகின் தலைசிறந்த சட்ட பள்ளிகளில் அதுவும் ஒன்றாக தற்போதும் விளங்கி வருகிறது.

மும்பை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து பின்னர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானவர் சுதந்திரகுமார். இவர் 2010ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி தன்னிடம் வந்த 77 வழக்குகளில் 75 வழக்குகளுக்குத் தீர்ப்பு கூறி உலக சாதனை படைத்தார். உலகில் வேறெந்த சுப்ரீம் கோர்ட்டும் ஒரே நாளில் 75 தீர்ப்புகளை வழங்கியதில்லை.

கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் பி.பாலசுப்பிரமணியன் மேனன். இவர் 97 வயது வரை வக்கீல் பணியாற்றினார். அதிக ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்தவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவர் இடம் பெற்றுள்ளார். 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரே நேரத்தில் 11 பெண் நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவி வகித்தனர். 125 ஆண்டு கால இந்திய நீதிமன்றங்களில் இப்படி நடந்தது இதுவே முதல் முறை.

ஒய்.வி.சந்திரசூட், இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், நீண்ட காலம் தலைமை நீதிபதி நாற்காலியை அலங்கரித்தவர் என்ற சாதனை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட்டையே சாரும். அவர் சுமார் 7 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். இவரது மகன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். அவர் 10 நவம்பர், 2024 அன்று ஓய்வு பெற்றார். நவம்பர் 9, 2022 அன்று இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். தந்தையும் மகனும் இந்திய சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்தது இதுவே முதல் முறை. இந்திய நீதிமன்றங்களில் இதுவரை சைகை மொழியில் யாரும் வாதாடியதில்லை. இதற்கு நீதிமன்ற வரலாற்றில் முதன்முதலாக 2023 செப்டம்பர் 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அனுமதி அளித்தார் சந்திரசூட்.

மிளகாயை விரும்பி ஏற்கும் பிரத்யங்கிரா தேவி!

குழந்தைகளின் உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க உதவும் 5 வகை பானங்கள்!

சாப்பிட்ட உடனே வயிறு கலக்குதா? இத சாதாரணமா நினைக்காதீங்க!

முன்னாள் கணவரை சீண்டிய சமந்தா! என்ன சொன்னார்?

சில பொருட்களை சில காரணங்களுக்காக பயன்படுத்தாமல் போனாலும் பிரச்சனைதான்!

SCROLL FOR NEXT