World Ozone Day 
ஸ்பெஷல்

அனைத்துலக ஓசோன் படலப் பாதுகாப்பு நாள் - ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை!

தேனி மு.சுப்பிரமணி

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 16 ஆம் நாளன்று, “அனைத்துலக ஓசோன் படலப் பாதுகாப்பு நாள்” (International Day for the Preservation of the Ozone Layer) கடைப்பிடிக்கப்படுகிறது.

சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம் ஆகும். இதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், 1994 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான அனைத்துலக நாளாக, இந்நாளைத் தேர்வு செய்து அறிவித்தது. 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதியன்று ஒப்புக்கொள்ளப்பட்டபடி ஓசோன் அடுக்கைக் குறைக்கும் பொருட்களின் மீதான மாண்ட்ரீல் நெறிமுறையில் நாடுகள் கையெழுத்திட்ட 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதியின் நினைவாக இந்த நாள் கடைப்பிடிப்பது உருவாக்கப்பட்டது.

ஓசோன் (Ozone) என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் காணப்படுகின்றது. இது ஒட்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope) வாகும். இது ஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்து விடும் தன்மை கொண்டது.

1840ல் சி.எப்.ஸ்கோன்பின் (Christian Friedrich Schönbein) என்பவர் ஓசோனைக் கண்டுபிடித்தார். அது ஒருவகையான மணம் தருவது என்ற அடிப்படையில் கிரேக்க மொழியில் மணத்தைக் குறிக்கும் (ozein, 'மணத்தல்') ஓசோன் என்று பெயர் சூட்டினார். ஆனால் மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்த விஞ்ஞானப் பெயரின் பொருள் ஓசோன்

என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1865ல் ஜாக்ஸ் லூயிஸ் சோரெட் (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை.

இது பின்னர் சி.எப்.ஸ்கோன்பின் அவர்களால் 1867 இல் உறுதி செய்யப்பட்டது. ஒரு இரசாயனப் பொருளின் மாற்றுருவாக (allootrope) அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும். புவிக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழலில் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் மனிதர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் சுவாச செயற்பாட்டிற்கு கேடு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.

ஆனால், புவியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. சூரிய ஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளன. இத்தகைய ஒளிக் கதிர்களை செங்கீழ்க் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். செங்கீழ்க் கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக ஓசோன் படலம் செயற்படுகிறது.

ஓசோன் படை மண்டலத்தில் உற்பத்தியானாலும், இதன் 90 வீதம் படை மண்டலத்தின் தாழ் பகுதியில் உள்ளது. படை மண்டலத்தின் தாழ்பகுதியில் ஒட்சிசன், உயர் ஆற்றல் வாய்ந்த சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீசலின் மூலமும் ஓசோன் உற்பத்தியாகின்றது. இப்பகுதி புவியின் வளிமண்டலத்தின் அதிகளவான பகுதியை (90%) உள்ளடக்கி உள்ளது. இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10 முதல் 25 மைல் (15 - 40 கிமீ) உயரத்தில் அமைந்துள்ளது. வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி 'டாப்சன்' அலகினால் அளவிடப்படுகிறது. ஓசோன் அடர்த்தி கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன. அவற்றில் சில டாப்சன் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ப்ருவர் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ஜோடு மீட்டர், பில்டர் ஓசோன் மீட்டர் எம்.83, பில்டர் ஓசோன் மீட்டர் எம்.124, மாஸ்ட், ஒக்ஸ்போர்டு, சர்பேஸ் ஓசோன் பப்ளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட் போன்றனவாகும்.

இந்நெறிமுறை கையொப்பமிடப்பட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஓசோன் படலத்தில் உள்ள துளை மூடுவது கவனிக்கப்பட்டது. ஓசோன் சிதைவுக்குக் காரணமான வாயுக்களின் தன்மை காரணமாக, அவற்றின் வேதியியல் விளைவுகள் 50 மற்றும் 100 ஆண்டுகளுக்கு இடையில் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT