கர்நாடகாவில் தும்குர் மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் மகளான அருணா, இப்போது இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
–இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
என் பெற்றோருக்கு என்னையும் சேர்த்து மொத்தம் ஐந்து குழந்தைகள். இந்நிலையில் எங்கள் அனைவரையும் நன்கு படிக்க வைக்க விவசாயியான என் தந்தை விரும்பினார். அந்த வகையில் எங்கள் ஐந்து பேரின் கல்விக்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல்,என் தந்தை கடந்த 2009-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மறைவு எங்களை மிகவும் பாதித்தது. நான் கலக்டர் ஆக வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்றப் படித்தேன். என் தந்தையின் கனவும், நாட்டில் விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது கனவும் இப்போது நனவாகியிருக்கிறது.
-இவ்வாறு அருணா தெரிவித்தார்.