ஸ்பெஷல்

வானில் ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள்: இம்மாதம் முழுவதும் காணலாம்!

கல்கி

இந்த ஜூன் மாதத்தில் வானில் ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அவற்றை நாம் வெறும் கன்களாலேயே காண முடியும் என்று தேசிய வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து தேசிய வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது;

இந்த ஜூன் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் வானில் ஒரே நேர்கோட்டில் தோன்ற உள்ளன. இவற்றை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும்.

இதற்குமுன்  இவ்வாறு ஒரே நேர்கோட்டில் 5 கோள்கள் தோன்றும் நிகழ்வு 2002-ல் நடந்தது. இப்போது ஜூன் மாதத்துக்குப் பிறகு, இதேபோன்ற அரிய நிகழ்வு இனி 2040-ல் நிகழும். இந்த அபூர்வ நிகழ்வை தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன் காணலாம். 

-இவ்வாறு வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரித்து வாழ வேண்டும்!

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT