ஸ்பெஷல்

சர்வதேச செஸ் ஒலிம்யாட்  ஜூலை 27-ல் தொடங்கும்:  தமிழக அரசு!

கல்கி
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில்  நடத்தப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது:
 

சர்வதேச 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த  மாமல்லபுரத்தில் ஜூலை 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும்.இப்போட்டியில் பல்வேறு நாடுகளிலிலிருந்து சுமார்  2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் 44 போட்டிகள் நடைபெற உள்ளன. வீரர்கள் தங்குவதற்காக  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் 2,500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. போட்டியில் கலந்து கொள்ளும் 75 இந்திய கிராண்ட் மாஸ்டர்களில் 24 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 – இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT