ஸ்பெஷல்

‘இந்த வெற்றி என் மனைவிக்கு சமர்ப்பணம்’; சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா!

கல்கி

ஐபிஎல் 15-வது சீசனின் 22-வது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இந்த சீசனில் சிஎஸ்கே-வுக்கு கிடைத்த முதல் வெற்றி இது! இதற்கு முன்னதாக இந்த சீசனில் நான்கு போட்டிகளில் சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது.

இந்நிலையில் நேற்றைய வெற்றிக்குப் பின் சிஎஸ்கே அணி கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:

ஒரு கேப்டனாக நான் பெற்றுள்ள இந்த முதல் வெற்றியை எனது மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன். கடந்த நான்கு போட்டிகளில் தோல்வியுற்ற சிஎஸ்கே இந்த போட்டியில் வெற்றிக் கனியை எட்டிப் பிடித்துள்ளோம். இதற்குக் காரணம் எங்கள் அணியின் ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் துபேவின் அற்புதமான பேட்டிங்தான்! மேலும் எங்கள் அணியின் உரிமையாளர்களும் நிர்வாகமும் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். மேலும் தோனி உடபட எங்கள் டீமின் மூத்த வீரர்களிடம் ஆலோசனை கேட்பேன். எங்கள் அணியில் அனுபவம் அதிகம் உள்ளது. இனிவரும் போட்டிகளில் பாசிட்டிவ் மனநிலையில் ஆட்டத்தை அணுகுவோம்.

-இவ்வாறு ரவீந்திர ஜடேஜா கூறினார்.

இந்தப் போட்டியில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியிருந்தார். அதோடு கடைசி நேரத்தில் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை கொடுத்து வந்த தினேஷ் கார்த்திகை பவுண்டரி லைனில் அற்புதமான கேட்ச் பிடித்து வெளியேற்றியிருந்தார் ஜடேஜா.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT