ஸ்பெஷல்

நெல்லை கல்குவாரி விபத்து: 2- வது நாளாக மீட்புப் பணிகள்!

கல்கி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் நேற்று பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை மீட்கும் பணியில் இன்று 2-வது நாளாக தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுட்டுள்ளனர்.

முன்னீா்பள்ளத்தை அடுத்த அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்தக் குவாரியில் வெடி வைத்து உடைக்கப்பட்ட கற்களை சனிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாறைகள் சரிந்து விழுந்ததில் அனைவரும் கற்குவியலுக்குள் சிக்கிக்கொண்டனா்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை, நான்குனேரி தீயணைப்பு வீரா்கள் வெகுநேரம் போராடி 3 பேரை உயிருடன் மீட்டனா். அவா்கள் செல்வம் என்பவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்

எஞ்சிய 3 பேரை மீட்பதற்காக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடா் மீட்புப் படை குழுவினா் இந்த குவாரிக்கு நேற்று மாலை வந்து  மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். எனினும், பாறைகள் தொடர்ந்து சரிவதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குவாரியில் சிக்கியுள்ள செல்வகுமார், ராஜேந்திரன் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய 3 பேரை மீட்க 2-வது நாளாக இன்று முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. 

இதனிடையே, கல்குவாரி குவாரி உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

SCROLL FOR NEXT