ஸ்பெஷல்

ஐபிஎல் போட்டி: கொரோனா தொற்றால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனிமைப்படுத்தல்!

கல்கி

ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஒட்டுமொத்த அணியும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிசியோதெரபி  பயிற்சியாளர் பேட்ரிக் ஃபார்ஹார்டுக்கு கடந்த 15-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த அணியின் மேலும் ஒரு வீரருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து டெல்லி கேப்பிடலஸ் அணியின் மொத்த வீரர்களும் மும்பையில் தனிமைப் படுத்தப் பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக டெல்லி அணி விளையாட புனேவுக்குச் செல்லும் திட்டத்தை டெல்லி அணிக்கு ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும்வரை டெல்லி அணி  புனே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் ஐபிஎல் சீசன் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT