ஸ்பெஷல்

12 எம்.எல்.ஏ-க்கள் மாயம்: மகாராஷ்டிர அரசியல் மர்மம்!

கல்கி

மகாராஷ்டிராவில் ஆளும்கட்சியான சிவசேனாவைச் சேர்ந்த 1 அமைச்சர் உட்பட 12 எம்எல்ஏக்கள் திடீரென மாயமானதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காலியாக இருந்த 10 இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர்கள் 5 பேர், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சார்பாக தலா 2 பேர், காங்கிரஸ் 1 என்ற  கணக்கில் வெற்றி பெற்றனர். இதில் சிவசேனாவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித் திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் ஆளும்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 12 எம்.எல்.ஏக்கள் இன்று காலை முதல் திடீரென மாயமாகியுள்ளனர். அவர்களின் செல்போன்கள் அணைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மாயமான அந்த 12 பேரும் குஜராத்திலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. ஆனால், இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT