ஸ்பெஷல்

தமிழகத்தில் புதிய வகை கொரோனா; மாஸ்க் கட்டாயம்!

கல்கி

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 4-வது அலை பரவியுள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா அதிகரித்து வருகிறது

இந்நிலையில், தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளதால் அனைத்து அலுவலர்களும் இன்று முதல் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் எஸ்.அனு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் சில மாவட்டங்களில் புதிய வகை கொரோனா கண்டறியப் பட்டுள்ளது. மேலும் சமீப நாட்களாக பல மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே பாதுகாப்பை முன்னிட்டு அனைத்து அலுவலர்களும் இன்று முதல் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப் படுகிறது. மேலும் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள் 

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்… ஹீரோ யார்?

சிங்கத்தை ஏன் வேட்டையாடுகிறார்கள் தெரியுமா? 

வாய்வு கோளாறுகளுக்கு நிவாரணம் தரும் சோம்பு!

விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை உங்களுக்கு இருக்கா? அதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய 10 பண்புகள் என்ன?

மகிழ்ச்சியை வரவழைக்கும் மந்திரம் இதுதான்!

SCROLL FOR NEXT