ஸ்பெஷல்

புதிய மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்க எதிர்ப்பு: ஆந்திராவில் கலவரம்!

கல்கி

ஆந்திராவில் புதிய மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் கலவரம் ஏற்பட்டதால், அங்கு ஊரடங்கு தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மொத்தம் இருந்த  13 மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 26 மாவட்டங்களாக பிரித்து அம்மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கொணசீமா என்ற மாவட்டம் பிரிக்கப்பட்டு, அதற்கு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கொணசீமா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசாரார் தடையை மீறி பேரணி நடத்தினர். அச்சமயம் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் அமைச்சர் விஸ்வரூப் மற்றும் மும்முடிவரம் எம்எல்ஏ சதீஷ் ஆகியோரின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 8 பேருந்துகளுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால், ஊரடங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.,ஏலும் நகர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மரங்கள் சூழ வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை அறிவோமா?

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தந்திரங்கள்! 

ஜப்பானியர்கள் பின்பற்றும் வாழ்க்கைக்குத் தேவையான 6 யுக்திகள்!

இந்தியாவின் பாரம்பரிய புடவை கட்டும் முறைகள்!

சிறுகதை - ‘ஹாய்’?

SCROLL FOR NEXT